தமிழகத்தில் இன்று
அம்மன் கண்ணில் கண்ணீர்: பாண்டியில் பரபரப்பு
சென்னை:
பாண்டிச்சேரி அருகில் சின்ன கோட்டக் குப்பத்தில் உள்ள கோயிலில் அம்மன் சிலை கண்ணீர் வடிப்பதாக பரவியதகவலை அடுத்து அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
பாண்டிச்சேரி அருகே சின்ன கோட்டக்குப்பம் என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள தென்னந்தோப்பில் 10ஆண்டுகளுக்கு முன்பு புற்று உருவானது. நாளாக நாளாக அந்த புற்று வளர்ந்தது. உடனே அப்பகுதி மக்கள் அந்தபகுதியில் கோட்டை அமைத்து கோயிலாக வழிபட ஆரம்பித்தனர். வெள்ளிக் கிழமைகளில் முட்டை, பால் அளித்துவணங்கி வந்தனர்.
இப்புற்றுக் கோவிலில் 2 அடி உயர நாகாத்தம்மன் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்தனர். பின்னர் இக்கோயிலைச்சுற்றியுள்ள கிராமங்களில் பிரபலமானது. முத்தியால்பேட்டை மார்க்கெட்டுக்கு காய்கறி வியாபாரம் செய்யச்செல்லும் பெண்கள், ஆண்கள் என எல்லோரும் இக்கோயிலில் வழிபட்டு விட்டு தான் செல்வது வழக்கமானது.
இந்நிலையில் இந்த கோயிலில் உள்ள நாகாத்தம்மன் சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவதாக தகவல்பரவியது. துடைக்க துடைக்க நீர் கசிவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
அம்மனுக்கு என்ன குறையோ தெரியவில்லையே என்று அக்கிராம மக்கள் கவலையோடு குறிப்பிடுகின்றனர்.அம்மன் சிலை கண்ணீர் வடிக்கும் தகவல் தெரிந்து கோட்டக்குப்பம், நடுக்குப்பம், சோதனைக்குப்பம்,கருவடிக்குப்பம், கோட்டைமேடு, முத்தியால்பேட்டை, சோலைநகர், இந்திராநகர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்துபக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications