தமிழகத்தில் இன்று
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்திக் கொள்ள மில்களுக்கு அழைப்பு
கோவை:
மத்திய ஜவுளித்துறை அளித்துள்ள தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை மில்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், விதிமுறைகளில் மாற்றங்கள்கொண்டுவரப்பட்டுள்ளன என மத்திய ஜவுளித்துறை கமிஷனர் கத்வா தெரிவித்தார்.
கோவையில் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் சார்பில் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி குறித்த கருத்தரங்கு சிமா ஹாலில் நடந்தது.
விழாவில் கலந்து கொண்டு மத்திய ஜவுளித் துறை கமிஷனர் கத்வா பேசியதாவது:
ஜவுளித்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியை அறிவித்தது. இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ள மில்களுக்கு பலவிதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இவற்றில் பல விதிகள் கடுமையாக இருப்பதாகவும், அவற்றை குறைக்க மில்கள் கோரிக்கை விடுத்தன.
இதனைத் தொடர்ந்து மில்கள் இந்த நிதியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு போதுமானஅதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதியை நிர்வகித்து மில்களுக்கு வழங்க இந்திய தொழிற்சாலை மேம்பாட்டு வங்கி மற்றும் சிறுதொழில்மேம்பாட்டு வங்கிகள் தலைமையில் மற்ற வங்கிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த வங்கிகளுக்குத் தேவையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளன. இவை தனது அதிகார வரம்பிற்குட்பட்டு மில்களின் தொழில்நுட்ப மாறுதல்களைஆராய்ந்து கடனுதவி அளிக்கலாம். இந்த நிதி தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் கீழ் குறைந்த வட்டியில் வழங்கப்படும்.
தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியைப் பெறும் மில்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் கால அளவு 8 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.இந்தக் காலக் கெடுவுக்குள் கடனை மில்கள் திருப்பிச் செலுத்தலாம்.
முதல் ஆண்டில் சிறிய அளவிலானத் தொகையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் வகையில் கடனைத் திருப்பிச் செலுத்த போதுமான சலுகைகள்அனுமதிக்கப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் மில்கள் இரண்டு ஆண்டு காலம் வரை அவகாசம் வழங்கப்படும்.
தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு பிறகு இவை லாபத்தில் இயக்க வேண்டும். கைத்தறிகளைப் பொறுத்தவரை செமி ஆட்டோமேடிக் வகை இயந்திரங்களைஇறக்குமதி செய்ய புதிய விதிமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாராகாத பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களை இறக்குமதி செய்து கொள்ளலாம். இவை 10 ஆண்டுகள் மற்றும் அதற்குக் குறைவானஆண்டுகளே பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்த இயந்திரங்கள் இறக்குமதிக்கான வரி 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதம் வரை சலுகைஅளிக்கப்படுகிறது.
இவ்வாறு ஜவுளித் துறை கமிஷனர் கத்வா தெரிவித்தார்.
விழாவில் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் சேர்மன் மாணிக்கம் ராமசாமி, துணைத் தலைவர் பட்டோடியா, இந்தியத் தொழில்மேம்பாட்டு வங்கிஅதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications