தமிழகத்தில் இன்று
தேயிலை இறக்குமதியைத் தடை செய்ய பா.ஜ.க. கோரிக்கை
கோவை:
சிறுதேயிலை விவசாயிகளின் நலன் காக்க தேயிலை இறக்குமதியைத் தடை செய்ய வேண்டும் என தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் மாநலத் தலைவர்கிருபாநிதி கூறினார்.
குன்னூரில் நேற்று அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேயிலை இறக்குமதியால் தேயிலை விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த விலை வீழ்ச்சியால் தென்னிந்தியாவில் உள்ள தேயிலை பயிரிடும் சிறுவிவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இலங்கையிலிருந்து இறக்குமதியாகும் தேயிலையைத் தடை செய்ய வேண்டும். இது குறித்து மத்தியவர்த்தகத் துறை அமைச்சர் மாறனிடம் பேசுவேன்.
பாரதிய ஜனதாக் கட்சித் தனி ஈழத்தை ஒரு போதும் ஆதரிக்காது. தமிழர்களுக்கென தனி மாகாணம் உருவாக்கலாம். இதில் அவர்களுக்கு முழுஉரிமை மற்றும் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா 7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 30 லட்சம் இளைஞர்களும், பெண்களும் கட்சியில் உறுப்பினராக விருப்பம்தெரிவித்துள்ளனர் என்று கிருபாநிதி தெரிவித்தார்.
உடனிருந்த நீலகிரித் தொகுதி எம்.பி.,மாஸ்டர் மாதன் கூறுகையில், தேயிலை விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு, தேயிலைத் தூளை பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் விற்பனை செய்ய வேண்டும்.
தேயிலை ஏலத்தில் அரசும் கலந்து கொண்டு தேயிலை விலையை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பச்சைத் தேயிலைக்கு கிலோ ஒன்றிற்குகுறைந்த பட்சம் 10 ரூபாயாவது விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.
தரமான தேயிலையை உற்பத்தி செய்ய விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றார்.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications