தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

இலங்-கை-யைப் பிரிப்பதில் தவறில்-லை - -மீண்-டும் கூ-று-கிறார் கருணாநிதி

சென்னை:

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தமிழ் ஈழமே நிரந்தர தீர்வாக அமையும் என்று தமிழக முதல்வர் மு. கருணாநிதி -மீண்-டும் -கூ-றி-யுள்-ளார்.

ஜூன் 3-ம் தேதி சென்னையில் நடந்த தனது பிறந்த நாள் விழாவில் பேசிய கருணாநிதி, இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண-செக்-கஸ்-லோ---வே-கி-யா-வைப் போல் இ-லங்--கை-யை இரண்டாகப் பிரிக்கலாம் என்று கூறினார்.

கருணாநிதியின் இக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அரசியல் தலைவர்கள் பலர் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் தான் கூறிய யோசனையை நியாயப்படுத்தி 5 பக்க அறிக்கையை கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் அவர்கூறியுள்ளதாவது:

இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் இலங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவேண்டும் அல்லது, ஐரோப்பியகுடியரசு நாடுகள் போல் இலங்கையை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியைத் தமிழர்களிடமும், மற்றொரு பகுதியை சிங்களர்களிடமும் கொடுக்கலாம்.

இதை பிரிவினைவாதம் என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தாலும், இதுதான் நிரந்தர தீர்வாக இருக்கும். இந்த எனது யோசனைதான்சிறந்ததாக அமையும். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த யோசனையை தமிழர்களின் நலனுக்காக நான் சொல்லவில்லை. மனிதாபிமான அடிப்படையில்இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணவே இதைச் சொல்கிறேன்.

இலங்கை இனப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணவும், போரை நிறுத்தவும் எந்தவகையிலாவது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே என்விருப்பம். பிரச்சினையைப் பெரிதாக்கி, அதைக் காரணம் காட்டி தமிழர்களை அகதிகளாக தமிழகத்துக்கு அனுப்பி, எங்களுக்குப் பிரச்சினைஏற்படுத்தவேண்டாம் என்பதே இலங்கை அரசுக்கு எனது வேண்டுகோள்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடந்து வரும் போரை தடுத்து நிறுத்த அரசியல் ரீதியான தீர்வுதான் நிரந்தரமானது. ராணுவ நடவடிக்கையில் ஒருபோதும்தீர்வு காணமுடியாது. இனப் பிரச்சினைக்கு ஐரோப்பிய குடியரசு நாடுகள் அடிப்படையில் அரசியல் தீர்வு காணலாம் என்று யோசனை கூறுவது தவறல்ல.

உங்கள் நாட்டை இரண்டாகப் பிரியுங்கள் என்று எந்த நாட்டுக்கும், எந்த நாடும் உத்தரவிட உரிமை இல்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால்,இலங்கைப் பிரச்சினையில் நிலைமை அப்படியல்ல. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறையில் இருந்து பேசுபவர்களுக்கும், நிலைமையை நேரில் பார்த்துஅறிந்தவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசமான பிரச்சினை இது.

இலங்கை வரலாற்றைப் பார்த்தால், அங்கு வசிக்கும் தமிழர்கள் அங்கு கூலித் தொழிலாளர்களாகச் சென்று குடியமர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் அந்நாட்டின்உண்மையான குடிமக்கள். ஆனால், இதை இலங்கை அரசு மறந்துவிட்டு தமிழர்களின் உரிமையைப் பறித்துக் கொண்டது மட்டுமல்ல அவர்களை இரண்டாம்தர மக்களாக நடத்துகிறது.

சுதந்திரத்துக்குப் பிறது பண்டாரநாயகா-செல்வநாயகம் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி தமிழர்களுக்கு அதிக உரிமைவழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அதை இலங்கை அரசு அமல்படுத்தத் தவறிவிட்டது. இப்போது இலங்கை, சிங்களர்களுக்கு மட்டுமே என்று அந்நாடு செயல்பட்டு வருகிறது. சிங்கள மொழி அரசு மொழியாக்கப்பட்டது. தொழிற்படிப்புகளில் தமிழர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. புத்தமதத்தைப்பின்பற்றும்படி தமிழர்கள் வற்புறுத்தப்பட்டனர்.

இலங்கையில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. கல்வி, மொழி, வேலைவாய்ப்பு என அனைத்துப் பிரிவிலும் தமிழர்கள் தங்களது உரிமையைஇழந்தனர். ஆனால், தமிழர்களுக்கு வாக்களிக்கும் உரிமையில் சில கட்டுப்பாடுகளை இலங்கை அரசு விதித்ததால் நிலைமை முற்றிலுமாக மாறியது.

ஆரம்ப காலத்தில் தங்களது உரிமைகளுக்காக காந்திய வழியில் தமிழர்கள் போராடினார்கள். ஆனால், அவர்களை அடக்கும் நடவடிக்கையில் இலங்கைஅரசு ஈடுபட்டதால், தமிழர்கள் தங்களது உரிமையைப் பெற வேறு வழியைத் தேர்ந்தெடுத்துவிட்டனர்.

இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரத்தைப் பரவலாக்கி அவர்களை சிங்கள மக்களுக்கு இணையாக நடத்த இலங்கை அரசு முன் வந்தால், இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும். அதைவிட்டு, இனப் பிரச்சினைக்கு இடைக்கால தீர்வு காண வேறு முயற்சிகளை இலங்கை அரசு மேற்கொண்டால்பிரச்சினை மேலும் அதிகமாகும்.

பேச்சு உரிமை எல்லோருக்கும் உண்டு. உலக நாடுகள் எல்லாம் அதற்கு மதிப்பு கொடுக்கின்றன. பல வருடங்களாக அயர்லாந்திலும், வேல்ஸிலும்இருந்த பிரச்சினைக்கு இங்கிலாந்து சிறந்த தீர்வைக் கண்டது. அயர்லாந்துக்கும், வேல்ஸுக்கும் அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்து தனி நாடுகளைஉருவாக்கியது. அந்த நடவடிக்கையை மேற்கோள் காட்டித்தான் நான் எனது யோசனையைத் தெரிவித்தேன்.

தான் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைக்கும் புத்த மதத்தினர் ஆதரவு தருவார்கள் என்று இலங்கை அரசு நம்பக்கூடாது. ஏனெனில் இலங்கையைப்பொறுத்தவரை அவர்கள் மூன்றாம் நிலை மக்கள்தான். முன்னாள் அதிபர் பண்டாரநாயகா புத்த பிட்சால்தான் கொல்லப்பட்டார் என்பதை இலங்கைஅரசு மறந்துவிடக்கூடாது என்றார் கருணாநிதி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+