காங். தலைவர்கள் மாற்றமும்...அலுவலக திண்டாட்டங்களும்...
ஆதிவாசிகள் மேம்பாட்டிற்கு உயிரித் தொழில்நுட்பத் திட்டங்கள்
கோவை:
ஆதிவாசிகள் மற்றும் கிராமப் புறப் பெண்கள் மேம்பாட்டிற்காக 45 உயிரித் தொழில்நுட்பத் திட்டங்கள் அறிகப்படுத்தப்படும் என மத்திய உயிரித்தொழில்நுட்பத் (பயோடெக்னாலஜி) துறையின் இயக்குநர் சின்கா தெரிவித்தார்.
கோவையில் உள்ள ஜி.ஆர்.டி அறிவியல் கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பமும், சமுதாய முன்னேற்றத்தில் அதன் பங்கும் என்ற தலைப்பில் கருத்தரங்குநடந்தது. இந்தக் கருத்தரங்கின் போது நிருபர்களிடம் சின்கா கூறியதாவது:
இந்தியா முழுவதிலும் உள்ள 400 கிராமங்களில் உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆதிவாசிகள் மற்றும் கிராமப் புறங்களில் சுற்றுச் சூழலைப்பாதுகாக்கவும் ரூ.4 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இத்திட்டம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உட்பட மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள கிராமங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின்உதவியுடன் அமல்படுத்தப்படும்.
உயிர் உரங்கள், பூச்சிகளை அழிக்க எதிர் உயிரி, பட்டுக் கூடு வளர்ப்பு, காளான், கோழிப்பண்ணை உட்பட பல்வேறு தொழில்கள் இதில் அடங்கும். மேலும்,உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூலிகைச் செடிகளை உற்பத்தி செய்தல், மருத்துவப் பொருட்கள் உற்பத்தியும் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு போதுமான பயிற்சி அளிக்கப்படும் என்று சின்கா தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications