பலித்-த-து பாகிஸ்தான் கனவு
டாக்கா:
டாக்காவில் நடந்த ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் 39 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, முதல் முறையாக கோப்பையைவென்றது பாகிஸ்தான்.
கேப்டன் மொயின் கான் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றார். ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி துவங்கியது முதல்ஒருமுறை கூட பாகிஸ்தான் கோப்பையை வென்றதில்லை. இந்தியாவும், இலங்கையும் மட்டுமே கோப்பையை வென்று வந்தன.
வங்க தேசத் தலைநகர் டாக்காவில் இம்முறை நடந்த போட்டியில் எப்படியும் கோப்பையை வென்று விட வேண்டும் என்ற நோக்கத்தில் துவக்கத்திலிருந்தேபாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடி வந்தது.
ஒரு போட்டியிலும் தோல்வியடையாமல், வெற்றி வாகை சூடிய பாகிஸ்தான் இறுதிப் போட்டியிலும் வென்று கனவை நனவாக்கியது. கேப்ட் மொயின்கான் பொறுப்புடன்ஆடி அணி நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 31 பந்துகளைச் சந்தித்து 56 ரன்களை அவர் குவித்தார்.
கேப்டனுக்குத் துணையாக இன்சமாம் உல் ஹக், அதிரடியாக ஆடி 72 ரன்களைச் சேர்த்தார். முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் மொயின் கான்,முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். துவக்க ஆட்டக்காரர்களாக அன்வரும், இம்ரான் நசீரும் களம் இறங்கினர். முந்தைய போட்டிகளில் சிறப்பாக ஆடியஇம்ரான் இப்போட்டியில் 3 ரன்களுடன் திரும்பினார்.
சயீத் அன்வர் அபாரமாக ஆடி 115 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார். இதில் 6 பவுண்டரிகளும், 1 அழகான சிக்சரும் அடங்கும். அன்வருக்கு கம்பெனிகொடுத்து ஆடிக் கொண்டிருந்த அப்ரிதி 27 பந்துகளில் 22 ரன்களைச் சேர்த்தார்.
முந்தைய போட்டிகளில் கதாநாயகனாக மிளிர்ந்த யூசுப் யுஹானா இப்போட்டியில் பெரிய ஸ்கோரை எட்டாமல் ரசிகர்களை ஏமாற்றினார். 25 ரன்களில்அவரை சந்தனா அவுட் செய்தார்.
அவர் வெளியேறிய பிறகு அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பு கேப்டன் மொயின் கான் மற்றும் இன்சமாமிடம் விடப்பட்டது. அதற்கேற்ப இருவரும்இலங்கைப் பந்துவீச்சாளர்களை சோதித்து விட்டனர். 31 பந்துகளை மட்டுமே சந்தித்த மொயின் கான், 56 ரன்களைக் குவித்தார். இன்சமாம், கேப்டனுக்குப்போட்டியாக 66 பந்துகளில் 72 ரன்களை எடுத்தார். இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்களை பாகிஸ்தான் எடுத்தது.
எட்டக் கூடிய ஸ்கோர் என்ற நிலையில் இலங்கை தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டு, ஜெயசூர்யாவுடன், கலுவித்தரனாதுவக்க ஆட்டக்காரராக இறங்கினார். ஆனால் அதற்குப் பலன் இருக்கவில்லை. ரன் ஏதும் எடுக்காத நிலையில் சயீத் அன்வர், கலுவித்தரனாவை ரன்அவுட் செய்தார்.
கேப்டன் ஜெயசூர்யா அதிரடியாக ஆடி 25 பந்துகளில் 22 ரன்களைச் சேர்த்தார். ஆனால் மறுமுனையில், அவருக்கு சரியான துணை இல்லை. பின்ச் ஹிட்டராகஇறக்கப்பட்ட சமிந்தா வாஸ் கேப்டனை ஏமாற்றினார். 10 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.
முக்கிய தலைகள் வெளியேறிய நிலையில் அட்டப்பட்டுவும், ருஸ்ஸல் அர்னால்டும் பொறுப்புடன் ஆடினர். அட்டப்பட்டு அபாரமாக ஆடி சதத்தை எட்டினார்.இதற்கு அவருக்குத் தேவைப்பட்டது 124 பந்துகள். இதில் 10 பவுண்டரிகளையும் அவர் விளாசினார்.
அர்னால்டு 41 ரன்களைச் சேர்த்தார். அட்டப்பட்டுவும், அர்னால்டுவும் விளையாடியதைப் பார்த்தபோது, இலங்கை வெற்றி இலக்கை எட்டி விடும் என்றுதோன்றியது. ஆனால் அர்னால்டு அவுட் ஆனவுடன் அந்த நம்பிக்கை தகர்ந்தது. அர்னால்டுவும், அட்டப்பட்டுவும் சேர்ந்து 80 ரன்களைச் சேர்த்தனர்.
அர்னால்டு வெளியேறிய சில நிமிடங்களில் அட்டப்பட்டுவும், உபுல் சந்தனாவும் வாசிம் அக்ரம் பந்துகளில் வீழ்ந்தனர். சந்தனா வேகமாக ஆடி 24ரன்களைச் சேர்த்தார்.
இறுதியில் 42.5 ஓவர்கள் முடிந்த நிலையில், இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 238 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியைத் தழுவியது.
அணி தடுமாற்றத்தில் இருந்தபோது அதிரடியாகவும், பொறுப்போடும் ஆடி கெளரவமான ஸ்கோரை எட்ட உதவிய கேப்டன் மொயின் கான் ஆட்டநாயகனாகத் தேர்வானார். தொடர் நாயகனாக, யூசப் யுஹானா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications