கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
கொழும்பு:
இலங்கையில் நெருக்கடி நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களாக நெருக்கடி நிலை அமலில் உள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும்இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்த நிலையில், கொழும்பில்அமைச்சர் உள்பட 24 பேர் மனித வெடிகுண்டுக்குப் பலியானார்கள்.
இந்தச் சூழ்நிலையில் நெருக்கடி நிலையை நீட்டிக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து மேலும் ஒரு மாதத்திற்கு நெருக்கடி நிலையை அரசு நீட்டித்துள்ளது.
நெருக்கடி நிலையை நீட்டிப்பதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அமைச்சரின் மனைவியும் சாவு:
இதற்கிடையே, கொழும்பு மனித வெடிகுண்டு வெடிப்பில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொழில் துறை அமைச்சர்குணரத்தினேயின் மனைவி சியாமா, சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை இறந்தார்.
வயிற்றில் குண்டுச் சிதறல்கள் பாய்ந்து, ஆபத்தான நிலையில் சியாமா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல்வியாழக்கிழமை அவர் இறந்தார்.












Click it and Unblock the Notifications