தமிழகத்தில் இன்று
புரட்சிக்காரர்களை சந்-தித்-து பேச மூத்-த பிஜி தலை-வர்-க-ள் -திட்-டம்
சுவா:
பிஜி தீவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்-த மூத்-த தலை-வர்-கள் பிஜி பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் அங்கு புரட்சிக்காரர்கள் மற்றும் ராணுவத்தலை-வர்-க-ளை வெள்ளிக்கிழமை சந்-தித்-திப் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
பிஜி தீவில் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு தலைமையில் புரட்சிக்காரர்கள் அங்கு ஆட்சி புரிந்து வந்த மகேந்திரா பால் செளத்திரியையும், அவரது அமைச்சரவையில்உள்ள 30 பேரையும் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்-ளனர். இதையடுத்து ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பிணைக்கைதிகளில் ஒருவர் தனதுசகோதரியின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதற்காக விடுவிக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் 19 ம் தேதி தொடங்கிய இந்தப் பிரச்சனை இன்னும் தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பிஜித் தீவின் பூர்வீகக் குடிமக்கள் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் புரட்சிக்காரர்களுடனும், ராணுவத்தினருடனும்பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே பிஜி தீவு காமன்வெல்த் அமைப்பிலிருந்து காமன்வெல்த் அமைப்பின் எட்டு உறுப்பினர் கொண்ட காமன்வெல்த் அமைச்சரவைநடவடிக்கைக் குழுவால் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. காமன்வெல்த் அமைப்பின் முக்கியக் கவுன்சில்களிலிருந்து பிஜி நீக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பிஜி மீது பொருளாதாரத் தடை விதிப்பது தொடர்பாக எந்த முடிவையும் காமன்வெல்த் எடுக்கவில்லை. பிணைக்கைதிகளாகஅடைக்கப்பட்டுள்ள பிரதமர் மகேந்திர பால் செளத்ரி மற்றும் அவர்களுடன் உள்ள 29 அமைச்சர்களையும் விரைவில் விடுவிக்கவேண்டும் என்றும் குழு, தீவிரவாதிகளுக்குக் கோரிக்கை விடுத்தது.
பிணைக் கைதிகளை நீக்குவதற்கும், மீண்டும் ஜனநாயக ஆட்சியைக் கொண்டு வருவது தொடர்பாகவும் பிஜிக்கு உயர் மட்டக் குழுஒன்றை அனுப்பவும் காமன்வெல்த் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பிஜி நிலவரம் குறித்து ஆஸ்திரேலியா வெளியுறவுத் துறை அமைச்சர் அலெக்சாண்டர் டெளனர் கூறுகையில், பிஜியில் நடக்கும் கலவரம்மிகவும் மோசமானது. அங்கு தொடர்ந்து புரட்சிக்காரர்களால் பிரச்சனைகள் ஏறபட்டு வருவதால் அந்நாட்டின் பொருளாதாரம்மிகவும் பின்தங்கும் ஆபத்து உள்ளது.
இதனால் பிஜி மட்டுமின்றி துவாலு, சமோவா, டோங்கா நாடுகளும் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் நிலவுகிறது. இந்த சமயத்தில்பிஜி குறித்து அனைவரும் யோசித்துப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து பிஜியைநீக்குவதே சரியான தீர்வு என்றார்.
பிஜி ராணுவச் செய்தித் தொடர்பாளர் தாராகினிகினி கூறுகையில், காமன்வெல்த் கமிட்டி பிரதமர் மகேந்திர பால் செளத்திரியைவிடுவிக்குமாறும், அவருடன் பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்டுள்ள 29 பேரையும் விடுவிக்கும்படி கூறியுள்ளனர். புதிய இடைக்காலஅரசு அமைவது வரை ராணுவத்தினர் வரும் மூன்று மாதத்திற்கு பிஜியில் ஆட்சி புரிவதற்கு கோரிக்கை விடுத்துள்ளோம் எனறார்.

-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications