தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ர-யில்-வே அதி--கா-ரி கீர்த்-தி-வா-சனிடம் சிபி-ஐ தொடர்ந்-து விசா-ர--ணை

சென்னை:

தெற்கு ரயில்வே பொது மேலாளர் கீர்த்திவாசனிடம் சி.பி.ஐ. அதிகா-ரிகள் இரண்டாவது -நாளாக விசாரணை -நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது அவரது இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட 80 லட்ச ரூபாய் மதிப்புள்ளநகைகள் மற்றும் பொருட்களுக்கான வருமான ஆதாரங்களை அதிகா-ரிகள் விசா-ரித்தனர்.

மேலும் பெங்களூர், ஐதராபாத் போன்ற நகரங்களிலும், சென்னையில் மூன்று இடங்களிலும் அவர் வாங்கிக் குவித்துள்ளசொத்துக்கள் பற்றிய கணக்கு விவரங்களையும் சிபிஐ அதிகாரிகள் ஆராய்ந்தனர்.

கீர்த்திவாசன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் அல்லது தற்காலிக பதவிநீக்கம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் கீர்த்திவாசன், தஞ்சாவூரை சேர்ந்தவர்.

சென்னையில் அவரது இல்லம் நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ளது. ரயில்வேக்கு சொந்தமான பிரமாண்ட பங்களாஇது. இந்த இல்லத்தில் வெள்ளிக்கிழமை காலை அதிரடிச் சோதனையில் சி.பி.ஐ.அதிகாரிகள் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் பாலக்காட்டில் உள்ள ரயில்வே அதிகாரி ராஜா-ம-ணி என்-ப-வர் வீட்டிலும், பழனியில் உள்ள ரயில்வேகான்ட்ராக்டர் பழ-னி ஆகி-யோர் வீட்டிலும் சி.பி.ஐ.அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இவர்கள் மூவரும் சேர்ந்து திருச்சி - தாம்பரம் வரையிலான அகல ரயில் பாதைத் திட்டப் பணிகளில் -முறைகேடு செய்துள்ளதாகதெ-ரியவந்துள்ளது. 1995-96ம் ஆண்டில் தெற்கு ரயில்வேயின் தலைமை -நிர்வாக அதிகா-ரியாக கீர்த்திவாசன் இருந்தார்.

அப்போது சென்னை - திருச்சி அகல ரயில் பாதை அமைக்கும் பணியை கான்ட்ராக்ட் விட்டதில் கீர்த்திவாசன் கணிசாமானதொகை லஞ்சம் பெற்றுள்ளார் என்று புகார் கூறப்பட்டது. இதனால் ரயில்வேக்கு 58 லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது என்றும்,இப்பணிகளை மறுடெண்டர் விட்டதால் ரயில்வேக்கு 2 கோடி 36 லட்ச ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டது என்றும் இவர் மீது புகார்கூறப்பட்டது.

இதையடுத்து இவரது வீட்டில் சி.பி.ஐ. வெள்ளிக்கிழமை சோதனை நடத்தி, புகார்களுக்கான ஆதாரங்களை கைபற்றியது. 8இடங்களில் வீடுகள் வாங்கியிருப்பதையும், ஏராளான சொத்துக்கள், -நகைகள், பொருட்கள், அமெ-ரிக்க டாலர்கள் கீர்த்திவாசன்வீட்டில் இருந்ததையும் அதிகா-ரிகள் கைபற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+