தமிழகத்தில் இன்று
கீர்த்திவாசனிடம் ரூ. 80 லட்சம் சொத்து
சென்னை:
தென்னக ரயில்வே பொது மேலாளர் கீர்த்தி வாசன் வீட்டில் நடந்த சி.பி.ஐ. சோதனையில் ரூ. 80 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
கீர்த்தி வாசன், ரயில்வே காண்டிராக்டர் பழனி, பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகி ராஜாமணி ஆகியோரது வீடுகளில் வெள்ளிக்கிழமை ஒரேநேரத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். வெள்ளிக்கிழமை முழுவதும் நடந்த இந்த சோதனையில் கீர்த்தி வாசன் வீட்டிலிருந்து ரூ. 80 லட்சம்மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
15 சி.பி.ஐ.அதிகாரிகள் நடத்திய சோதனையின் மூலம், ரூ. 4.50 லட்சம் மதிப்புள்ள பங்குப் பத்திரங்கள், ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம், 1,950 அமெரிக்கடாலர்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இவை தவிர, பெங்களூர், சென்னை, மைசூரில் வாங்கியிருந்த அசையாச் சொத்துக்கள் குறித்த தஸ்தாவேஜுகளும்சிக்கின.
சோதனை குறித்து சி.பி.ஐ. இணை இயக்குநர் முகர்ஜி கூறுகையில், திருச்சி-தாம்பரம் இடையே போடப்பட்ட அகல ரயில் பாதைப் பணிக்குத் தேவையானகாண்டிராக்டில் முறைகேடு நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இப்பணிக்குத் தேவையான ஜல்லிக் கற்கள் விநியோகம் தொடர்பான காண்டிராக்ட்விடப்பட்டதில் தவறு நடந்துள்ளது. இதனால் ரயில்வேக்கு ரூ. 58.70 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நேரத்தில் இந்தப் பணி நடக்காததால், இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வேறு காண்டிராக்டரை தேட வேண்டியதிருந்தது. இதனால்ரயில்வேக்கு கூடுதலாக ரூ. 2.36 கோடி செலவு ஏற்பட்டது என்றார்.
சென்னையில் பெசன்ட் நகர், பாலவாக்கம்,கே.கே. நகர் ஆகிய இடங்களில் கீர்த்திவாசன் வீடுகள் வாங்கியுள்ளார். புதிதாக ஒரு வீடும் கட்டி வருகிறார்.இதுதவிர, பெங்களூர், மைசூரிலும் அவர் இடம் வாங்கிப் போட்டுள்ளார்.
கீர்த்திவாசன் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் 420 (ஏமாற்றுதல்), ரயில்வே சட்டம் 13(2), 13(1), மற்றும் தண்டனைச் சட்டம் 467, 468(மோசடி, ஆவணங்களை மாற்றுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
திருவள்ளூர் மக்களுக்கு தெற்கு ரயில்வே குட்நியூஸ்.. புதிதாக 6 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications