தமிழகத்தில் இன்று
ஜூ-ன்11, 2000
பாஞ்சாலி சபதம்
6. துரியோதனன் சகுனியிடம் சொல்வது
(தொடர்ச்சி)
பொற்றடத் தேரொன்று வாலிகன்
கொண்டு விடுத்ததும் - அதில்
பொற்கொடி சேதியர் கோமகன்
வந்து தொடுத்ததும்,
உற்றதோர் தம்பிக்குத் தென்னவன்
மார்பணி தந்ததும் - ஒளி
யோங்கிய மாலையாம் மாகதன்
தான்கொண்டு வந்த தும்,
பற்றல ரஞ்சும் பெரும்புக
ழேக லவியனே - செம்பொற்
பாதுகை கொண்டு யுதிட்டிரன்
தாளினில் ஆர்த்ததும்,
முற்றிடு மஞ்சத் திற்குப்பல
பல தீர்த்தங்கள் - மிகு
மொய்ம்புடை யான்அவந்தியர்
மன்னவன் சேர்த்ததும் (50)
மஞ்சன நீர் தவ வேத
வியாசன் பொழிந்ததும் - பல
வைதிகர் கூடிநின் மந்திர
வாழ்த்து மொழிந்த தும்
குஞ்சரச் சாத்தகி வெண்குடை
தாங்கிட,வீமனும் - இளங்
கொற்றவ னும்பொற் சிவிறிகள்
வீச, இரட்டை யர்
அஞ்சுவர் போலங்கு நின்று
கவரி இரட்டவே - கடல்
ஆளுமொருவன் கொடுத்ததோர்
தெய்விகச் சங்கி னில்
வஞ்சகன் கண்ணன் புனிதமுறுங்
கங்கை நீர் கொண்டு - திரு
மஞ்சன மாட்டும்அப் போதில்
எவரும் மகிழ்ந்த தும், (51)
மூச்சை யடைந்த தடா! சபை
தன்னில் விழுந்துநான் - அங்கு
மூர்ச்சை யடைந்தது கண்டனையே!
என்றன் மாமனே!
ஏச்சையும் அங்கவர் கொண்ட
நகைப்பையும் எண்ணுவாய் - அந்த
ஏந்திழை யாளும் எனைச்சிரித்
தாளிதை எண்ணு வாய்
பேச்சை வளர்த்துப் பயனொன்று
மில்லை, என் மாமனே! - அவர்
பேற்றை அழிக்க உபாயஞ் சொல்வாய்,
என்றன் மாமனே!
தீச்செயல் நற்செயல் ஏதெனினும்
ஒன்று செய்து நாம் - அவர்
செல்வங் கவர்ந்த வரைவிட
வேண்டும் தெருவிலே.(52)
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications