நர்ஸிடம் முறைகேடாக நடந்து கொண்டாரா வார்னே?
சிட்னி:
இங்கிலாந்து நர்சிடம் தவறாக நடந்து கொண்டதாக வந்துள்ள புகாரையடுத்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஷான் வார்னே மீதுஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தற்போது லண்டனில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை அதிகாரி மால்ஸ்பீட் இந்த மாத இறுதியில் நாடு திரும்புகிறார்.அதன் பிறகு ஒழுங்கு நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாம்ப்ஷயர் கவுன்டி கிரிக்கெட் அணிக்காக தற்போது வார்னே விளையாடி வருகிறார். லீசெஸ்டர் இரவு விடுதிக்குச் சென்ற வார்னே, அங்கு வந்த நர்,டோனா ரைட் என்பவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் அதை அனுமதிக்கவில்லை. இதையடுத்து செல்போன் மூலம், நர்ஸிடம்முறைகேடாக பேசியதாகத் தெரிகிறது.
வார்னேயின் இந்த செயல் குறித்து இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது. வார்னேவிடமிருந்து தேவையில்லாத, அறுவறுப்பான போன் கால்கள்வருவதாக நர்ஸ் டோனா ரைட்டும் கூறியிருந்தார்.
டெய்லி மிர்ரர் பத்திரிகைக்கு டோனா ரைட் அளித்த பேட்டியில், வார்னே யார் என்று எனக்குத் தெரியாது. நான் கிரிக்கெட்டை ரசிப்பவள் அல்ல. வார்னேகுறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை.
வார்னே பார்ப்பதற்கு நன்றாகவும் இல்லை. தடியாக இருக்கிறார். வாயில் எப்போது பார்த்தாலும் சிகரெட் வேறு என்று டோனா கூறியிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து வார்னே கருத்துத் தெரிவிக்கையில், ஒவ்வொரு கதைக்கும் மறுபக்கம் உண்டு. இதுகுறித்து நான் கருத்துத் தெரிவிக்கவிரும்பவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications