தமிழகத்தில் இன்று
ஸ்ரீவில்லிப்புத்தூர் அ-ருகே 6 பேர் வெட்டிக்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விடுதலைசிறுத்தை புதிய தமிழகம் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டுபெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்துக் கூறப்படுவதாவது:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி என்ற கிராமம் உள்ளது. அங்கே கடந்த 9மாதங்களுக்கு முன் புதியதமிழகம் கட்சியினருக்கும், விடுதலை சிறுத்தைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அந்தக் கலவரத்தில் 80 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டு 6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதனால் இரண்டு கட்சித் தொண்டர்களுக்குமிடையே முன்விரோதம்இருந்தது.
இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையின்போது மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ராயப்பன் என்பவர்வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் எந்த சமயத்திலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை இருந்தது.
தலை துண்டிப்பு: ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் புதுப்பட்டி அம்பேத்கார் தெருவைச் சேர்ந்த தங்கம்(30)கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணன்(40) ஆகியோர் அங்கிருந்த டீக்கடை ஒன்றில் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களுடன் அங்கு வந்த கும்பல் ஒன்று அவர்கள் இருவரையும் ஓட ஓடவிரட்டியது. அவர்கள் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். அவர்களது தலையை மட்டும் தனியே துண்டித்தஅக்கும்பல் அவற்றை அங்குள்ள அம்பேத்கார் சிலை முன்பு வைத்து விட்டு ஓடிவிட்டது.
பின்னர் அக்கும்பல் வ.புதுப்பட்டி பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்த கிறிஸ்டியான் பேட்டையைச் சேர்ந்தஆபிரகாம்(60) என்பவரை சராமரியாய் வெட்டி விட்டு ஓடி விட்டது. அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். அவர் தன் மனைவி சாராவுடன் நின்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நடந்தது.
கலவரம் தொடர்ந்தது: 3 பேர் சராமரியாய் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும்பரவியது. இரண்டு கோஷ்டியினரும் வன்முறையில் இறங்கினர்.
புதுப்பட்டியிலுள்ள இந்திரா காலனிக்குச் சென்ற ஒரு கும்பல் வீடுகளுக்குள் புகுந்து பெண்களையும் தாக்கியது.இதில் காளியப்பன் (60)என்பவர் இறந்தார். அப்போது அரிவாள் வெட்டுக்கள் விழுந்த நல்லதாய்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். செல்லம், சிட்டு ஆகிய பெண்களுக்கும் அரிவாள்வெட்டு விழுந்தது. அவர்கள் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இரவு வரை வன்முறை: இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை இரவு ஆர்.சி.தெருவுக்குள் புகுந்த கும்பல் ஒன்றுஅங்கிருந்த முத்தம்மாள் (60) என்ற பெண்ணை வெட்டிச் சாய்த்தது.
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
அங்கு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications