தமிழகத்தில் இன்று
துணிச்சலுக்குப் பெயர் போன பைலட்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஜெய்ப்பூர்:
நினைத்த கருத்தைத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும், தைரியமாகவும் வெளிப்படுத்தும் குணம் படைத்தராஜேஷ் பைலட், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராகவும் தனது கருத்தை வெளிப்படையாகக்கூறியவர்.
ராஜஸ்தானில் உள்ள தனது சொந்தத் தொகுதியான தாசாவில் ஞாயிற்றுக்கிழமை ராஜேஷ் பைலட் சுற்றுப்பயணம்செய்தபோது, அவரது ஜீப் மீது பஸ் மோதியது. காயமடைந்த பைலட் மருத்துவமனையில் இறந்தார்.
55 வயதாகும் ராஜேஷ் பைலட் ராணுவ சேவைக்குப் பிறகு அரசியல்வாதியாக மாறியவர். இவருக்கு மனைவி,மகன், மகள் உள்ளனர். 1945 ம் ஆண்டு டெல்லியில் ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ராஜேஷ் பைலட். மீரட்பல்கைலக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றபின் இவர் ராணுவத்தில் சேர விரும்பினார். இதற்காக விமானம் ஓட்டும்பயிற்சியில் சேர்ந்தார். பின்னர் தனது விருப்பப்படியே விமான ப் படையில் பைலட்டாக சிலகாலம் பணிபுரிந்தார்.
15 ஆண்டுகள் விமானப் படையில் பணிபுரிந்த இவர் போர் விமானங்களையும், போக்குவரத்து விமானங்களையும்ஓட்டி அனுபவம் பெற்றவர். அப்போது ஏற்பட்ட பைலட் என்ற பெயர் அவரது அரசியல் வாழ்க்கையிலும்இரண்டறக் கலந்தது.
1979 ம் ஆண்டு விமானப் படையைப் பணியைத் துறந்து அரசியலில் குதித்தார். பின்னர் 1980 ம் ஆண்டுராஜஸ்தான் மாநிலத்தில் தாசா தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 1985 ம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றிபெற்றார். 6 முறை இவர் தாசா தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ராஜீவ் காந்திஅமைச்சரவையில் 1985 முதல் 1989 வரை தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.
கடைசியாக 1991 முதல் 1996 வரை நரசிம்மராவ் அமைச்சரவையில் உள்துறை மற்றும் தகவல்தொடர்புஅமைச்சராக இருந்தார். உள்நாட்டுப் பாதுகாப்பு இணை அமைச்சராக இருந்தபோது காபினட் அமைச்சர்சவானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சுற்றுப்புறச் சூழல் துறைக்கு மாற்றப்பட்டார்.
சோனியாவை எதிர்த்தவர்: காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினராகப் பதவி வகித்து வந்த இவர் காங்கிரஸ்கட்சியில் சோனியாகாந்திக்கு அடுத்தபடியாக உள்ள இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கியமானவர்.
எந்தக் கருத்துக்களையும் பகிரங்கமாகவும், தைரியமாகவும் கூறுபவர் பைலட். ராஜீவ் காந்தி மறைவுக்குப்பின்அரசியலில் நேரு குடும்பத்தின் தலையீட்டை விரும்பாத தலைவர்களில் இவரும் ஒருவர். சோனியாவின் அரசியல்பிரவேசத்திற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தவர். காங்கிரஸ் கட்சியில் பிரியங்கா வருவதையும் இவர் அறவேவிரும்பவில்லை.
தலைவர்கள் வருத்தம்: ராஜேஷ்பைலட்டின் அகால மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர்வாஜ்பாய், மூத்த தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், கர்நாடக முதல்வர் கிருஷ்ணா, ராஜஸ்தான்முதல்வர் அசோக் கேலாட், டில்லி முதல்வர் ஷீலா தீட்சித், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் பிரதமர்வி.பி.சிங் ஆகியோர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
ராஜேஷ் பைலட்டின் உடல் திங்கள்கிழமை டெல்லி கொண்டு வரப்படுகிறது. பைலட் விபத்தில் இறந்த செய்திகேட்டதும், அவரது மனைவி ஜெய்ப்பூருக்கு விமானத்தில் புறப்பட்டார். அவரை விமான நிலையம் வரை வந்துசோனியா காந்தி வழியனுப்பி வைத்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications