தமிழகத்தில் இன்று
தமிழ-கத்-தை கலக்-கிய முகமூடிக் கொள்ளைக் கும்பல் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பல ஊர் மக்களை பீதி அடையச் செய்த 12 பேர் கொண்ட முகமூடிக் கொள்ளைக்கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இக்கும்பலிடம் இருந்து 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பணம், நகைகளை மீட்டனர்.
திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, ஆலங்காயம் போன்ற பகுதிகளில்தொடர்ந்து கைவரிசையைக் காட்டி வந்த இக்கொள்ளைக் கும்பலை பிடித்தபோலீசாரை பாராட்டி தமிழக போலீஸ் டி.ஜி.பி.சர்மா வெகுமதிகள் வழங்கினார்.
போலீஸ் எஸ்.பி.ரமேஷ் கொடவாலா தலைமையில் டி.எஸ்.பி. மாரியப்பன் மற்றும்போலீசார் அடங்கிய குழுவினர் இரவு பகலாக தேடி தினகரன் தலைமையிலான 12பேர் முகமூடிக் கொள்ளைக் கும்பலை பிடித்தனர்.
இக்கும்பல் இரவு, பகல் நேரங்களில் வீடுகளில் புகுந்து கத்தி முனையில் கொள்ளைஅடித்து வந்தன. 98ல் இக்கும்பல் கொள்ளை அடிக்க புகுந்த வீட்டில் இருந்த விவசாயிஒருவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடியது.
இக்கும்பலிடம் இருந்து 4 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், 80 சவரன் நகை, 40ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications