முகத்தில் தெளித்த சாரல்...
தேடிச் சென்ற
கள்ளிச் செடி புதரில்
குட்டிகளுக்குப் பாலூட்டும் நாய்
மின்னொளி சீனிவாசன் என்பவர் எழுதிய தமிழ் ஹைகூ
ஆழ்ந்த உள்வாங்கலைக் கொண்ட கவிதையாய்
அது மலர்ந்திருந்தது.
நாம் பொதுவாக ரோஜாச்செடிகளை தேடிச் செல்பவர்கள்
இப்போது கள்ளிச்செடியைத் தேடிப்போகிறோம்
எதற்காக?
அவற்றிற்கு நீர் ஊற்றவா?
கள்ளிச்செடிக்கும் பிரபஞ்சத்தில் ஒரு பங்கும், அழகும்
காணப்படுகிறது, அதை ரசிக்கும் மனப்பான்மையிலா?
நிச்சயம் இல்லை-
நாம் இயற்கையைக் கூட
பயன்பாட்டைக் கொண்டே அளக்கிறோம்-
உபயோகமானதே நேசிக்கப்படுகிறது.
கள்ளியில் தான் உபயோகமென்பது இல்லையே-
பிறகெதற்குக் கள்ளிச் செடியை
பூமியில் இன்றும் விட்டு வைத்திருக்கிறோம்?
கள்ளியும் நமக்குத் தேவை
அதன் விஷத் தன்மையை விஷமத் தன்மையுடன்
உபயோகித்துக் கொள்ளும் சுயநலத்திற்காக
காப்பாற்ற வேண்டிய தாய்மையே
பெண் குழந்தைகளின் வாயில்
தாய்ப்பாலுக்கு பதில் கள்ளிப் பாலின் மூலம்
கொள்ளி வைக்க
இந்தக் கதையை
இப்படியும் கொள்ளலாம்
தனக்குப் பிறந்த பெண் குழந்தையைக்
கொல்ல தாய் கள்ளிச் செடியைத் தேடி
செல்லுகிறாள்-
கள்ளியைக் கூட இனி பூமியில் தேட வேண்டும்
மனிதனின் ராட்சஸப் பசிக்குக் கள்ளியும்
காணாமல் போகும்.
சுவரொட்டிகளைத் தின்னும் மடியொட்டிய மாடுகள்
கள்ளியையும் சாப்பிடக் கற்றுக்கொள்ளலாம்
நம்நாட்டில் எதுவுமே வீணல்ல
களையாக வந்த வேலிக்கருவை கூட
அடுப்பெரிக்க எங்கள் ஊர் ஏழைகளுக்கு விறகானது
கள்ளி எங்கே மூளைக்கும்
யாரும் அதைப் பயிரிடுவதில்லை
யாருமே பயிரிடாத இடத்தில்
எதையுமே பயிரிட முடியாத இடத்தில்
கள்ளிச் செடிகள் முளைக்கின்றன
கள்ளிப்பால் தாய்ப்பாலாக வேண்டுமெனின்
பலியாகும் பெண் குழந்தைகளையும்
கள்ளிகளாகக் கருதும் சமுதாயம்
கள்ளிச் செடி புதரில்
மனிதத் தாய் கொல்ல பால் தேடிப் போகிறாள்
அங்கு
தாய்நாய் குட்டிகளுக்குப் பாலூட்டிக்
கொண்டிருக்கிறது
தெருநாய்கள் குட்டிகளைக் கூட ஒளித்து
வைக்க வேண்டியதாயிருக்கிறது
இவற்றின் மடியில் பல நேரம் சுரக்க பாலிருக்காது
உணர்வற்று மெலிந்தாலும் உணர்வற்றும் போகாத
அவற்றின் காம்புகளில் இறங்கும் ஒவ்வொரு துளி
பாலும் உதிரமே
நாய்க்குக் குட்டிகளின் பால் பேதமில்லை
ஆணென்றும், பெண்ணென்றும்
பிறந்தவுடன் ஒரு குட்டியைப் பெற்ற தாயே
உண்டு விடும் விபரீதம்
விலங்குகள் சிலவற்றில் உண்டு
அது ஞாயிறும் உண்டு
ஈன்ற பசியின் காரணமாக
உடல் பலவீனத்தின் காரணமாக
ஈன்றவுடன் தன்குட்டியை உணவாக்கிக் கொள்ளும் தன்மை
பசியால் வாடும்
உணவு யாரும் தராத உயிரினங்களில் உண்டு
அவற்றிலும் மிகவும்
பலவீனமான
இறந்து போகக்கூடிய
நோஞ்சான் குட்டிகளைத் தேர்ந்தெடுக்குமே தவிர
பெண் குட்டிகளைத் தேர்ந்தெடுப்பதில்லை.
தாய் தன் குட்டிகளில் ஒன்றைத் தின்னத்
தேர்ந்தெடுப்பதற்குக் காரணம்
கருணையற்று வறண்ட நம் இதயங்கள் தான்
கள்ளிப் புதரில் குட்டிகளுக்குப் பாலூட்டும்
நாயைக் கண்டேறும்
திரும்புவாளா பெண்சிசுவின் தாய் அல்லது
தந்தைக்குத் தாய்-செல்பவள் பால் கொண்டு வரும்
தாதியெனின்
தந்தைக்குத் தாயெனின்
இதில் யார் தாய்?
யார் நாய்?
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications