தமிழகத்தில் இன்று
அழிந்தது 50 ஆண்டு பகை- கொரிய அதிபர்கள் சந்தித்-த-னர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பியாங்யாங்:
வட கொரிய அதிபர் கிம் ஜோங் இல்லும், தென்கொரிய அதிபர் கிம் டே ஜங்கும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசியதையடுத்து அவர்களுக்குள் இருந்த50 ஆண்டு பகை மறைந்தது.
தென்கொரிய அதிபர் கிம் டே ஜங் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக வடகொரியா சென்றார். அப்போது அவரும், வடகொரிய அதிபரும் சந்தித்துப்பேசினார்கள்.
50 ஆண்டு பகை:
ஒன்றாக இருந்த கொரிய நாடு 1948 ம் ஆண்டு வடகொரியா, தென்கொரியா என்று இரண்டு நாடுகளாகப் பிரிந்தது. பிரிந்த பின் இரண்டு நாடுகளும் பரமஎதிரிகளாகி விட்டன.
பகைமை உணர்வுடன் இரண்டு நாடுகளும் 1953 ம் ஆண்டு நடந்த கொரியப்போரில் மோதிக்கொண்டன. இதையடுத்து வந்த அனைத்துப் போர்களிலும் இந்தஇரு நாடுகளும் மோதிக்கொண்டன.
இந்தப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துப் பேசினார்கள்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்:
போருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு நாட்டு அதிபர்களும் நட்புணர்வுடன் சந்தித்துப் பேசினார்கள். இதற்காக தென்கொரிய அதிபர் 3 நாட்கள்சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை தனி விமானம் மூலம் வடகொரியா சென்றார்.
தலைநகர் பியாங்யாங்கிற்கு இவர் 130 வர்த்தக பிரமுகர்கள் மற்றும் 50 பத்திரிக்கையாளர்களுடன் சென்றார்.
இருநாட்டு அதிபர்களும் சுமார் 67 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார்கள்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் வடகொரியா:
இந்தியநேரப்படி காலை 10.25 மணிக்கு தென்கொரிய அதிபர் கிம் டே ஜங் வடகொரியா மண்ணில் காலடி எடுத்து வைத்த போது வடகொரியா அதிபர் கிம்ஜோங் இல் அவரைக் கை குலுக்கி வரவேற்றார்.
அவருக்கு அங்கு பிரம்மாண்ட சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் சிவப்பு - இளஞ்சிவப்பு மலர்க்கொத்துக்களைஅசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
விருந்தினர் இல்லத்தில்...:
இரு நாட்டு அதிபர்களும் பின்னர் பேக் வாவோன் விருந்தினர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்கள். இதற்குப்பின் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்நாங்கள் சந்தித்துப் பேசியதில் இரு நாடுகளில் வாழும் 7 கோடி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இது ஒரு நல்ல தொடக்கம். இந்தச் சந்திப்பு இரண்டுநாடுகள் இணைவதற்கான அறிகுறி என்றனர்.
இதையடுத்து வடகொரிய அதிபர் கிம் ஜோங் இல் விரைவில் தென்கொரியா சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications