தமிழகத்தில் இன்று
இலங்கைக்கு ரூ.450 கோடி நிதியுதவி அளித்தது சரியே - மூப்பனார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கைக்கு இந்தியா 450 கோடி ரூபாய் நிதியுதவி அளித்ததில் தவறில்லை. நிதியுதவி அளிப்பதில் கால நேரம் பார்க்க முடியாது என்று தமாகா தலைவர்மூப்பனார் தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
கேள்வி: அதிமுக பொதுச்செயலாளர் தனித்து ஆட்சி அமைப்போம் என்றார். நீங்கள் கூட்டணி ஆட்சி அமைப்போம் என்றீர்கள். இப்போது தமாகாவுடன்கூட்டணி தொடர வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?
பதில்: நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். அவருடைய நம்பிக்கையை அவர் சொல்கிறார். என்னைப் பொருத்தவரையில் மத்தியிலும், மாநிலத்திலும்கூட்டணி ஆட்சி தான் வரும்.
கேள்வி: திமுகவுடன் தமாகா நெருங்கி வருவதாக கூறப்படுகிறதே?
பதில்: பத்திரிகைகள்தான் அப்படி எழுதுகின்றன.
கேள்வி: இலங்கைக்கு இந்தியா நிதியுதவி அளித்ததை சிலர் எதிர்க்கிறார்களே?
பதில்: சிலர் தான் எதிர்க்கின்றனர். மெஜாரிட்டி பேர் அப்படி சொல்லவில்லை. நான் மெஜாரிட்டி பக்கம் இருக்கிறேன்.
கேள்வி: இலங்கைக்கு நிதியுதவி அளித்தது சரியா தவறா?
பதில்: அது தவறு இல்லை.
கேள்வி: ஈழத் தமிழர்களுக்கு விடுதலைப் புலிகள் மட்டுமே பிரதிநிதிகள் அல்ல என்றும், எல்லா தமிழ் அமைப்புகளையும் அழைத்துப் பேச வேண்டும்என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே?
பதில்: நான் ஏற்கனவே சொன்னதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு கட்சியும் இந்த பிரச்சினையில் தனிக் கொள்கையை கொண்டுள்ளன.அந்த வகையில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. முதல்வர் கூட தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
கேள்வி: விடுதலைப்புலிகளை அழைக்காமல் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமா?
பதில்: அவர்களை அழைக்காமல் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. அவர்களும் ஈழத் தமிழர்களுக்காகத் தான்போராடுகின்றனர்.
கேள்வி: இலங்கைக்கு நிதியுதவி அளிக்க இது சரியான நேரமல்ல என்கிறார்களே?
பதில்: உதவி செய்வதற்கு நேரம் காலம் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் பாதிக்கப்பட்டவர்கள் செத்துப் போவார்கள் என்றார் மூப்பனார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications