யாராவது வேலை கொடுங்களேன்...கெஞ்சுகிறார் மாரடோனா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஹவானா:
கால்பந்து மேதையாக இருந்து போதை அடிமையாக மாறியுள்ள முன்னாள்அர்ஜென்டினா கால்பந்து அணியின் கதாநாயகன், டியகோ மாரடோனா, தனக்குஉலகிலுள்ள எந்த கால்பந்து கிளப்பாவது மேலாளர் அல்லது பயிற்சியாளர் பதவி
கொடுத்தால் வேலை பார்க்கத் தயார் என்று கூறியுள்ளார்.
போதைப் பழக்கத்திலிருந்து விடுபடுவதற்காக கியூபா தலைநகர் ஹவானாவில்மருத்துவமனை ஒன்றில் தங்கி மாரடோனா சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர்ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் நலம் என்ற நிலையில் உள்ளார். இதுகுறித்ததுமாரடோனாவின் மேலாளர் கில்லர்மோ கொப்பாலா கூறுகையில், 39 வயதாகும்மாரடோனா, எதிர்காலம் குறித்துக் கவலைப்படுகிறார்.
ஐரோப்பா அல்லது லத்தீன் அமெரிக்காவில் உள்ள ஏதாவது ஒரு பெரிய கால்பந்துகிளப்பில் சேர்ந்து வேலை பார்க்க விரும்புகிறார்.ஆனால் இப்போதைக்கு அங்குவேலை ஏதும் காலியாக இல்லை. ஆனால் கால்பந்து விளையாட்டிலிருந்து பிரிந்திருக்கமாரடோனாவுக்கு விருப்பம் இல்லை.
மாரடோனாவின் வாழ்க்கையே கால்பந்துதான். எனவே உலகளவில் மிகப் பெரியஎந்தக் கால்பந்து கிளப்பாவது பயிற்சியாளர் அல்லது மேலாளர் பொறுப்புகொடுத்தால் அதை ஏற்க மாரடேனா தயாராக உள்ளார்.
ஸ்பெயினின் ரியல் மாட்ரிட், பார்சிலோனா, இத்தாலியின் ஜுவன்டஸ், இன்டர் மிலன்,நேப்பிள்ஸ், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட், ஆர்சனல், அர்ஜென்டினாவின்போகா ஜூனியர்ஸ், பிரேசிலின் பால்மீராஸ் ஆகிய அணிகளில் ஏதாவது ஒன்றில்தனக்கு பொறுப்பு கிடைக்கும் என்று மாரடேனா நம்புகிறார்.
1986-ல் நடந்த உலகக் கோப்பைப் போட்டியின் போது அர்ஜென்டினாவை வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்றவர் மாரடோனா என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகுபோதைக்கு அடிமையாகி அணியிலும், கால்பந்து உலகிலும் இடம் இழந்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications