தமிழகத்தில் இன்று
ஜெ. வளர்ப்புமகன் திருமணச் செலவு ரூ. 5.91 கோடி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஜெயலலிதாவின் மு ன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு பந்தல் மற்றும் அலங்காரத்திற்காக மட்டும் 5கோடியே 91 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்று தனி நீதிமன்றத்தில் பொதுப் பணித் துறை பொறியாளர்கள்சாட்சியம் அளித்தனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன். ஆட்சியில் இருந்தபோது இவரைவளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, அவரது திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தினார்.
பெரும் சர்ச்சையை கிளப்பிய அந்த திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் இப்போது ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன் ஆகியோர் மீது தொடரப்பட்டுள்ள வருமானத்தை மீறி சொத்துச் சேர்த்த வழக்கில் ஆதாரமாகதரப்பட்டுள்ளன.
வெள்ளிக் கிழமை தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கில் பொதுப் பணித் துறை கட்டட கட்டுமான உதவிப்பொறியாளர் தியாகராஜன் என்பவர் சாட்சியம் அளித்தார்.
அவர் அளித்த சாட்சியம் வருமாறு:
மேலதிகாரிகள் உத்தரவின் பேரில் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்கு செய்யப்பட்ட செலவுகள் குறித்துமதிப்பீடு பட்டியல் தயார் செய்தோம். சுதாகரன் திருமணம் நடந்த சென்னை எம்.ஆர்.சி.நகரையும், வரவேற்புநிகழ்ச்சி நடந்த திரைப்பட நகரையும் பார்த்தோம்.
எம்.ஆர்.சி. நகரில் திருமணத்திற்காக போடப்பட்ட பிரதான பந்தல் 2 லட்சத்து 35 ஆயிரத்து 200 சதுர அடிபரப்பளவு கொண்டது. இதன் மதிப்பு 18 லட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய். சாப்பாட்டு பந்தல் 2 லட்சத்து 16ஆயிரம் சதுர அடியில் போடப்பட்டது. இதன் மதிப்பு 17 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்.
வி.ஐ.பி.க்களுக்கான சாப்பாட்டு பந்தல் இரும்பு தகடுகளால் வேயப்பட்டிருந்தது. 24 ஆயிரம் சதுர அடியில்போடப்பட்ட இப்பந்தலின் மதிப்பு 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய். பந்தலில் செய்யப்பட்டிருந்த அலங்காரவேலைப்பாடுகளுக்கு 66 லட்சத்து 35 ஆயிரத்து 160 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மணமேடை நான்கு ஏ.சி.களுடன் நிரந்தரக் கட்டடமாக கட்டப்பட்டிருந்தது. 9 ஆயிரத்து 392 சதுர அடிபரப்பளவில் கட்டப்பட்ட மணமேடைக்கு அருகில் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு வரவேற்பு அறைகள்,இரண்டு குளியல் அறைகள் கட்டப்பட்டன. இதன் மதிப்பு 32 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய். மேலும் நாற்காலிகள்,மேஜைகள் உள்பட திருமணம் நடந்த எம்.ஆர்.சி.நகரில் மட்டும் 2 கோடியே 13 லட்சம் ரூபாய்செலவிடப்பட்டுள்ளது.
வரவேற்பு நடந்த திரைப்பட நகரில் 14 ஆயிரத்து 400 சதுர அடியில் பந்தல் போடப்பட்டது. இதற்கு ஒரு லட்சத்து15 ஆயிரத்து 200 ரூபாய் செலவாகும். 7 ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்ட சாப்பாட்டு அறைக்கு ஒரு லட்சத்து12 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. எல்லாம் சேர்த்து மொத்தம் 15 லட்சம் ரூபாய் செலவு.
போயஸ் தோட்டத்தில் இருந்து எம்.ஆர்.சி.நகர் வரையும், திரைப்பட நகர் வரையும் அமைக்கப்பட்ட அலங்காரவளைவுகளுக்கு 3 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 5 கோடியே 91 லட்ச ரூபாய்இந்த வகைக்கு மட்டும் செலவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சாப்பாடு, குடிநீர், பட்டாசு வகைகள், யானை, குதிரை பவனி ஏற்பாடுகள், வீடியோ, டிவி ஒளிப்பதிவுகள்,கலை நிகழ்ச்சிகள் ஆகியவை சேர்க்கப்படவில்லை என்றார் அவர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Kushbu: மகள் அவந்திகாவுக்கு திருமணம்! பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு- சுந்தர்.சி! மாப்பிள்ளை யார்? -
குஷ்பு மாப்பிள்ளை இவரா? அந்த போட்டோவை எடுத்து போட்டு அலப்பறை! ஜெ.தீபா கணவர் மாதவன் வரை போய்ட்டாங்களே -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications