கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

52 அகல் விளக்கேற்றி...9 முறை கோவில் வலம் வந்து...

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கும்பகோணம்:

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கும்பகோணத்தில் உள்ள சூரியனார் கோவிலில் சாமி கும்பிட்டார். அவருடன் அவரது உயிர்த்தோழி சசிகலாவும்வந்திருந்தார்.

தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கடந்த 8 ம் தேதி தஞ்சை சென்றார்.வியாழக்கிழமை தஞ்சையிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் சென்றார். அங்கே சூரியனார் கோவிலில் சாமி கும்பிட்டார். அவருடன் அவரது உயிர்த்தோழிசசிகலாவும் உடன்சென்றார்.

ஜெயலலிதாவும், சசிகலாவும் சாமிகும்பிட வந்தது உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் யாருக்கும் தெரியாது. கோயிலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கும்,சசிகலாவுக்கும் பூரணகும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினர் கோவிலுக்குள் யாரையும் விடவில்லை.

பத்திரிக்கை போட்டோகிராபர்கள், நிருபர்கள் யாரும் உள்ளே விடப்படவில்லை. போட்டோகிராபர் ஒருவரின் காமிராவை ஜெயலலிதாவின் பாதுகாப்புஅதிகாரி ஒருவர் பிடுங்கிக் கொண்டார். கடுமையான வாக்குவாதத்திற்குப் பின் காமிரா திருப்பியளிக்கப்பட்டது.

52 வயது ஆகும் ஜெயலலிதா அதைக்குறிக்கும் வகையில் கோவிலில் உள்ள சூரியன் சன்னிதானத்தில் 52 அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றிதரிசித்தார்.

உற்சவர் மூர்த்தி சன்னிதானத்தில் ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மல்லிகைப் பூமாலைகளும், பரிவட்டமும் அளிக்கப்பட்டது. அதற்குப் பின்ஜெயலலிதா கோவில் பிரகாரத்தை 9 முறை சுற்றி வந்தார். சசிகலாவும், அவரது உறவினர்களும் கூடவே சென்றனர்.

ஜெயலலிதாவுக்காக அமைக்கப்பட்ட விசேஷ பந்தலில் அவர் அமர்ந்தார். அங்கு 52 துறவிகளுக்கு வேட்டி, சாப்பாடு பொட்டலங்கள் அடங்கியபைகளை அளித்தார்.

வழக்கமாக 12.30 மணிக்கு கோவில் மூடப்பட்டுவிடும். ஜெயலலிதாவுக்காக கோவில் 2.30 வரை திறந்திருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+