கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
அமைதித் திட்டத்துக்கு சிங்களர்கள் எதிர்ப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
தமிழர்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்கும் வகையில் இலங்கை அரசு உருவாக்கி வரும் அமைதித் திட்டத்துக்கு சிங்கள தலைவர்கள் கடும் எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல ஆண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்காக இலங்கை அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறது.
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தரும் வகையில், புதிய சமரசச் திட்டத்தை இலங்கை அரசு உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகமுக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்கேவுடன் அதிபர் சந்திரிகா பேச்சு நடத்தி வருகிறார்.
ஜூலை மத்தியில் இதுதொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கு தீவிர சிங்கள அமைப்புகள்,கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சிங்களா உருமுயா என்ற கட்சியின் தலைவர் குணசேகரா கூறுகையில், தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் வகையிலான அரசியல் தீர்வை நாங்கள்அனுமதிக்க மாட்டோம். இதுதொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டால் அதை எதிர்ப்போம். தோற்கடிப்போம்.
புதிய சமரசத் திட்டத்தின்படி, புதிதாக அமைக்கப்படும் பிராந்தியக் கவுன்சில்களுக்கு கூடுதல் அதிகாரம் இருக்கும். பிராந்திய பாதுகாப்பு மற்றும்அதிகாரத்தில் இந்தக் கவுன்சிலுக்கு அதிக அதிகாரம் இருக்கும். இதனால் மத்திய அரசின் அதிகாரம் கேள்விக்குரியதாகி விடும். நாட்டின்இயாைண்மையும் பாதிக்கப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, அரசியல் சட்டச் சீர்திருத்தம் குறித்து முடிவெடுப்பதற்கான காலக் கெடுவை ஜூன் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்க முடியாது என்றுஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
அரசியல் சீர்திருத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 30-ம் தேதிக்கு மேல் நீடிக்க முடியாது என்று அதிபர் சந்திரிகா உறுதியாக கூறியுள்ளார்.
தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வட கிழக்கு மாகாணக் கவுன்சிலை அமைக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதில் விடுதலைப் புலிகள் அமைப்புஉள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இடம் பெற அரசு விரும்புகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு இந்த கவுன்சில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும். அதன் பிறகு வடக்கு மாகாணத்துடன் இணைந்து இருக்க, கிழக்கு மாகாணமக்கள் விரும்புகிறார்களா என்பது குறித்து அரசு கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்கும்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications