Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நடுக்கடலில் தத்தளித்த 48 அகதிகளை மீட்டது இலங்கை கடற்படை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமேஸ்வரம்:

இலங்கை எல்லைக்குட்பட்ட கடலில் 5 நாட்களாக தவித்துக் கொண்டிருந்த 48இலங்கைத் தமிழ் அகதிகளை, இலங்கைக் கடற்படையினர் மீட்டு அழைத்துச்சென்றனர்.

கடந்த 13-ம் தேதியன்று இரவில் 6- வது மணல் திட்டில் இறக்கிவிடப்பட்ட அகதிகளைமீட்க தமிழக அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், மத்திய அரசு, இலங்கை அரசடன் பேச்சு நடத்தி நடுக்கடலில் தவிக்கும்அகதிகளை மீட்கும்படி கோரிக்கை விடுத்தது. இதற்கிடையில் அகதிகளை மீட்கக் கோரிராமேசுவரம் சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் நம்புராஜன் ராமேசுவரம் கோர்ட்டில்வழக்கு தொடர்ந்தார்.

மணல் திட்டில் உயிர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த 48 அகதிகளை மனிதாபிமானஅடிப்படையில் மீட்க மத்திய - மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அனைத்து கட்சியினர் வற்புறுத்தி இருந்தனர்.

இதற்கிடையில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு 48 அகதிகளும் இலங்கைகடற்படையினரால் மீட்கப்பட்டனர்.

இலங்கையில் இருந்து கப்பலில் வந்த கடற்படையினர் திட்டு அருகே கப்பல் செல்லமுடியாததால் நடுக்கடலில் நிறுத்தினார்கள். பின்னர் தனி படகுகள் மூலம் மணல்திட்டுக்குச் சென்றனர்.

அங்கு பரிதவித்துக கொண்டிருந்த 48 அகதிகளையும் படகில் ஏற்றி இலங்கைக்குமீண்டும் அழைத்துச் சென்றனர்.

இந்தத் தகவலை ராமநாதபுரம் மாவட்டக் கலெக்டர் மணிபாரதி நிருபர்களிடம்தெரிவித்தார்.

அகதிகள் அனைவரும் தலைமன்னாரில் இறக்கி விடப்பட்டதாகவும் சொந்த ஊருக்குச்சென்று தங்களது பழைய வாழக்கையை தொடங்கும் படியும், மீண்டும்ராமேசுவரத்துக்கு தப்பி வர முயல வேண்டாம் என்றும் கடற்படையினர் அவர்களைஎச்சரித்து அனுப்பியதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+