தமிழகத்தில் இன்று
-க-டும் பொ-ரு-ளா-தா-ர நெ--ருக்-க-டி-யில் பிஜி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜியில் நடந்து கொண்டிருக்கும் கலவரத்தையடுத்து அங்கே சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்தும், கரும்புஉற்பத்தி மிகவும் பின்தங்கியும் காணப்படுகிறது. இதனால் பிஜி நாடு பொருளாதார நெருக்கடிக்குத்தள்ளப்பட்டுள்ளது.
பிஜி நாட்டில் சர்க்கரை ஏற்றுமதியும், சுற்றுலாத்துறையும்தான் அந்நாட்டுக்கு அந்நியச் செலாவணி பெற்றுத் தரும்முக்கியத்துறைகளாகும்.
கடந்த மே மாதம் 19 ம் தேதி புரட்சிக்காரர் ஜார்ஜ் ஸ்பீடு தலைமையில் புரட்சிக்கும்பல் பிரதமர் மகேந்திர பால்செளத்ரி மற்றும் 30 அமைச்சர்களைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்தது. இதையடுத்து ராணுவம் ஆட்சியைக்கைப்பற்றியது.
தலைநகர் சுவா உள்பட பிஜி நாட்டின் பல்வேறு பகுதிகள் இக்கலவரத்தால் குறிப்பாய் கரும்பிலிருந்து எடுக்கும்சர்க்கரை ஏற்றுமதி கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வருகை கணிசமாய்க்குறைந்துள்ளது.
இதுகுறித்து பிஜி சுற்றுலாத்துறை பிரிவு இயக்குநர் பில் ஒய்ட் கூறுகையில், தினமும் 1500 க்கும் மேற்பட்டசுற்றுலாப்பயணிகள் வரும் பிஜி நாட்டில் தற்போது 400 பேரே வருகிறார்கள். ஆஸ்திரேலியா, நியுசிலாந்துபகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது.
பிஜியில் ஜூன் முதல் அக்டோபர் வரை நல்ல சீதோஷ்ணநிலை இருக்கும். இந்த நேரத்தில் சுற்றுலாப் பயணிகள்அதிகம் வருவார்கள். கடந்த வருடம் சுற்றுலாப்பயணிகளின் வருகையால் நாட்டின் வருவாய் நாள் ஒன்றுக்கு 1.9மில்லியன் டாலர்களாக இருந்தது. இந்த வருடம் 2 மில்லியன் டாலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே பிஜிக்கு சுற்றுலா வருவதற்காக திட்டமிட்டிருந்த பயணிகள் கூட தலைநகர் சுவாவில் நடக்கும்பிரச்சனையினாலும், போலீசாரின் கெடுபிடிகளாலும் தங்கள் வருகையை ரத்து செய்துள்ளனர். இதனால்சுற்றுலாத்துறை கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
தலைநகர் சுவாவில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடத்தும் ஒருவர் இதுகுறித்துக் கூறுகையில், எங்கள்கடையில் எப்போதும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாய் இருக்கும். தற்போது யாருமே இங்கு வரவில்லைஎன்றார்.
மேலும் ஏற்கனவே பயிரிடப்பட்டு சேமித்து வைக்கப்பட்டுள்ள கரும்புகளை அரைத்து சர்க்கரை தயாரிக்கமுடியவில்லை. இதனால் அனைத்துக் கரும்புகளும் அழுகி கழிவாகிப் போகும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வியாபாரிகள் பிஜியில் பிரதமர் மஹேந்திர பால் செளத்ரி விடுதலை செய்யப்படும் வரைநாங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்பையோ, அல்லது சர்க்கரையையோ வாங்க மாட்டோம் என்றும்மறுப்புத் தெரிவித்து விட்டனர். இந்த நிலையில் பிஜியில் சர்க்கரை ஏற்றுமதியும் கடுமையாகப்பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சனைகளால் பிஜியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications