கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை சாலை விபத்தில் 4 கன்னியாஸ்திரீகள் பலி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை அருகே ஜீப்பும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 கன்னியாஸ்திரீகள் இறந்தனர். 5 பேர்காயமடைந்தனர்.

இவ்விபத்து ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை அருகே விராலிமலை பகுதியில் நடந்தது. இவ்விபத்தில் கன்னியாஸ்திரீகள் வினி (40), ராஜகனி (14),ஜான்சிராணி (18) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். நர்மதா (16) மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

இவ்விபத்தில் காயமடைந்த மேலும் 4 கன்னியாஸ்திரீகளும், ஜீப் டிரைவரும் திருச்சி கே.ஏ.பி. விஸ்வநாதம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இவர்கள் அனைவரும் தூத்துக்குடியிலிருந்து திருச்சி செல்லும்போது இவ்விபத்து நடந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற