நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் - மத்திய அமைச்சர் தகவல்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தைக் கொண்டு மத்திய அரசு யோசித்து வருவதாக மத்தியமனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவில் பல மாநிலங்கள், பல மதங்கள் உள்ளன. ஆகையால், நாடு முழுவதும் சீரான கல்விக் கொள்கையைக்கொண்டுவருவது என்பது இப்போதைக்கு முடியாத காரியம். ஆனால், ஒரே மாதிரியான பாடத் திட்டத்தைக்கொண்டு வர மத்திய அரசு யோசித்து வருகிறது. இது தொடர்பான திட்டம், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகவுன்சில் (எம்.சி.இ.ஆர்.டி.) பரிசீலனையில் உள்ளது.
எல்லோருக்கும் கல்வி என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டாயமாக்கியுள்ளது. மேலும்,சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்குச் சிஸ சிறப்பு உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்தியாமுழுவதும் சீரான கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது.
பல மாநிலங்களில் வெவ்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சி புரிகின்றனர். ஆகவே, அதன் காரணமாகவும் சீரானகல்விக் கொள்கையை அமல்படுத்துவது முடியாத காரியம். ஏனெனில், மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்புடையதாகஇருக்கும் சீரான கல்விக் கொள்கை கேரள மாநிலத்துக்கு ஏற்றதாக இருக்காது. இதுதான் சீரான கல்விக்கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த முடியாததற்குக் காரணம்.
நாடு முழுவதும் கல்வித் தரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. மாநிலஅரசுகளின் ஒத்துழைப்புடன் அந்த மாநில கல்விக் கொள்கையில் சில மாறுதல்கள் செய்து நாடு முழுவதும் ஒரேபாடத்திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றார் ஜோஷி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications