கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

அகதிகளை காப்-பாற்-றி சிறையில் அ-டக்-கும் இலங்-கை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:

ராமேஸ்வரத்திற்கு அருகே, இலங்கை எல்லையில், ஆடம்ஸ் பிரிட்ஜ் என்ற திட்டில் சிக்கிக் கொண்டு,இலங்கைக்கடற்படை வீரர்களால் மீட்கப்பட்ட 24 இலங்கைத் தமிழ் அகதிகளையும் திங்கள்கிழமை வரை காவலில்வைக்க தலைமன்னார் மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

மீட்டுச் செல்லப்பட்ட இவர்கள் தலைமன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். தற்காலிக நீதிபதிஇம்மானுவேல் காயஸ் பெலின்டோ இவர்களை திங்கள்கிழமை வரை காவலில் வைக்க உத்தரவிட்டனர். காவலில்வைக்கப்பட்ட அகதிகளில் 6 பேர் பெண்கள், மூன்று பேர் குழந்தைகள்.

24 அகதிகளும், 14-ம் தேதி இரவு 11 மணியளவில் தமிழகத்தின் மண்டபம் அகதிகள் முகாமிலிருந்துவெளியேறியுள்ளனர். பின்னர் படகு மூலம் தலைமன்னாருக்குக் கிளம்பியுள்ளனர். வழியில் மோசமான வானிலைகாரணமாக அவர்களது படகு கடலில் கவிழ்ந்தது. இதையடுத்து படகில் இருந்த ஆண்கள் பெரும் முயற்சிக்குப்பிறகு படகை, நடுக்கடலில் இருந்த திட்டு ஒன்றுக்குக் கொண்டு சென்றனர்.

அவர்கள் கரை சேர்ந்த இடம் ஆடம்ஸ் பிரிட்ஜ் தீவின் கரை ஆகும். அடுத்த நாள் காலை 7.30 மணியளவில்இவர்களை இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பார்த்துள்ளது. இதையடுத்து அன்று மாலை 4.30 மணியளவில்இலங்கைக் கடற்படை படகு வந்து அனைவரையும் மீட்டு தலை மன்னாருக்குக் கொண்டு சென்றது.

படகை கரை சேர்க்கும் முயற்சியின்போது, ஆறுமுகம் மனோகரன் (35) என்பவரின் கை உடைந்தது. அவருக்குஇலங்கைக் கடற்படை முதலுதவி கொடுத்தது. இதபோல, அரிச்சந்திரன் என்பவரின் 7 வயது மகன், அரிச்சந்திரன்கிருஷாந்தன் கடல் நீரில் மூழ்கினான். அவனது உடல் கிடைக்கவில்லை. பேசாலை என்ற பகுதிக்குச் செல்லஇவர்கள் படகில் வந்து கொண்டிருந்தனர். கிருஷாந்தனின் தாயார், மன்னார் நகரிலிருந்து 17 கிலோமீட்டர்தொலைவிலுள்ள அகதிகள் முகாமில் வசிக்கிறார்.

16-ம் தேதி தலைமன்னாரை அடைந்த இலங்கைக் கடற்படையினர், அகதிகள் 24 பேரையும் போலீஸாரிடம்ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர்.

அகதிகளில் பெரும்பாலானவர்கள், தொனிக்கல் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். சிலர் கிளிநொச்சியைச்சேர்ந்தவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+