கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
வெந்-த புண்-ணில் வேல் பாய்ச்-சும் பரூக் அப்துல்லா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு முழுமையான சுயாட்சி அந்தஸ்து கோருவது குறித்து விவாதிப்பதற்காக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதற்குபல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு கூடுதல் சுயாட்சி தர வேண்டும், 1953-ம் ஆண்டுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் இருந்த நிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும்என்பது தொடர்பாக விவாதிக்க சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை முதல்வர் பரூக் அப்துல்லா கூட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம்துவங்கியது.
மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் சமன் லால் குப்தா இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், பரூக் அப்துல்லாவின் இந்த நடவடிக்கைஅபாயகரமானது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும்.
கூடுதல் சுயாட்சி கேட்பதால், நல்லதை விட கெட்டதே விளையும். தனது ஊழியர்களின் சம்பளத்திற்குக் கூட மத்தியஅரசை நம்பியிருக்கும் நிலையில், கூடுதல்சுயாட்சி தர வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் கோருவது விசித்திரமாக உள்ளது.
மத்திய அரசு உதவியை நாடக் கூடாது என்று கூறி வரும் பரூக் அப்துல்லா, மத்திய நிதியுதவி இல்லாவிட்டால், ஒரு நாள் கூட ஆட்சியை நடத்த முடியாதுஎன்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் வருட வருமானம் ரூ. 1200 கோடி ஆகும். ஆனால் அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ. 3000 காடி ஆகும் என்றார் அவர்.
1953-ம் ஆண்டு வரை, ஜம்மு காஷ்மீர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு எந்தவிதத்திலும் தலையிட முடியாத நிலை இருந்தது. பாதுகாப்பு, வெளியுறவுத்துறை, தகவல் தொடர்பு ஆகியவை தவிர பிற எந்த விஷயத்திலும் மத்திய அரசு தலையிட முடியாது. தேர்தல் கமிஷனும், உச்சநீதிமன்றமும் கூடஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் தலையிட முடியாத நிலை இருந்தது.
கடும் எதிர்ப்பு:
பரூக் அப்துல்லா கூட்டியுள்ள சிறப்பு சட்டசபைக் கூட்டத்திற்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
சட்டசபை கூடியதுமே, காங்கிரஸ் பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்புச் செய்தனர்.
பிரிவினைவாதம் கோராத அரசியல் அமைப்பான ஹுரியத் அமைப்பும் சிறப்பு சட்டசபைக் கூட்டத்தைக் கண்டித்துள்ளது.
பாந்தர் கட்சித் தலைவர் பீம் சிங் கூறுகையில், மாநிலத்தில் மக்களிடையே இன மோதலை ஏற்படுத்த வழி வகுக்கிறார் பரூக் அப்துல்லா. 1953-க்குமுன் இருந்த நிலைக்கு ஜம்மு-காஷ்மீரை மாற்ற வேண்டும் என்று அவர் கோருவது நியாயமற்றது. மொத்த மாநிலத்தையே இந்தியாவிலிருந்துபிரிப்பதற்குச் சமமானது.
பாகிஸ்தானின் வசம் உள்ள ஆக்கிரமிப்புக் காஷ்மீரையும் சேர்த்து இந்தியாவை வலிமைப்படுத்துவதை விட்டு மாநிலத்தைப் பிரிக்க நினைப்பது சரியல்ல என்றார்அவர்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications