தமிழகத்தில் இன்று
இலவச போன் பெறும் ஊழியர்கள் வருமான வரி கணக்கு காட்ட வேண்டும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
3.5 லட்சம் தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களுக்கு இலவச தொலைபேசி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது, வருமான வரித்துறைக்கு நல்லபலனைக் கொடுத்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறை ஊழியர்கள் 3.5 லட்சம் பேருக்கு இலவச தொலைபேசி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இதையடுத்து வருமானவரித்துறையின் வலையமைப்பு விரிவாகியுள்ளது.
சட்டப்படி, தொலைபேசி வைத்திருக்கும் அனைவரும் வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, இலவச தொலைபேசி பெறும் அனைத்துத்தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களும், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, தங்களது சொத்து மதிப்பையும் அவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் விஷ்வபந்து குப்தா இதுகுறித்துக் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் 150 இலவச தொலைபேசிகால்களுக்கான கட்டணத்தில் 30 சதவீதத்தை வருமான வரியாகவும் இவர்கள் கட்ட வேண்டும் என்றார் குப்தா.
தொலைத் தொடர்புத் துறை ஊழியர்களுக்கு இலவச தொலைபேசி வழங்கும் திட்டத்தை மத்தி தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்அறிவித்தபோது, அதற்கு நிதியமைச்சரும், பிரதமரின் அலுவலகமும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்தத் திட்டத்தால், மத்திய அரசுக்குக் கூடுதலாக ரூ. 1200 கோடி செலவாகும் என்று நிதியமைச்சர் கருத்து தெரிவித்தார். இதையடுத்து பாஸ்வானுக்கும்,நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், பிரதமர் வாஜ்பாய், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications