தமிழகத்தில் இன்று
ஜெ, சசி -வங்-கிக் க-ணக்கு-க-ளில் பணம் பட்-ட-பா--டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:
ஜெயலலிதாவின் வங்கிக் கணக்கில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டது என்று சென்னை தனி நீதிமன்றத்தில்இந்தியன் வங்கி அதிகாரி சாட்சியம் அளித்தார்.
முதல்வராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.5 கோடி அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக ஜெயலலிதா,சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு தனிநீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
புதன்கிழமை இவ்வழக்கு நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன் -முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, 1994-96ம்ஆண்டுகளில் சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கி தலைமை மேலாளராக பணியாற்றிய அருணாசலம் சாட்சியம் அளித்தார்.
அவர் தனது சாட்சியில் கூறியதாவது:
இந்தியன் வங்கி அபிராமபுரம் கிளையில் 18.06.1992 அன்று ஜெயலலிதா பெய-ரில் "மறுமுதலீட்டுத் திட்டத்தின் கீழ் வைப்பு-நிதியாக ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டது. யூகோ வங்கியின் 7 லட்ச ரூபாய் காசோலை, பேங்க் ஆப் மதுராவின் 10 லட்சம்ரூபாய் காசோலை, கனரா வங்கி மயிலாப்பூர் கிளை ரூ.83 லட்சத்திற்கான இரண்டு காசோலைகள் டிபாசிட் செய்யப்பட்டன.
இந்த தொகையில் இருந்து 90 சதவீதம் வரை ஜெயலலிதாவுக்கு கடனாக கொடுக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புப் போலீசார்உத்தரவுப்படி தற்போது இந்த கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
11.03.1994 அன்று "பிலஸ் மஸ்ரூம்" என்ற பெயல் சசிகலா நடப்பு கணக்கு ஒன்றை துவங்கினார். இக்கணக்கில் 30.03.1994 அன்றுரூ.2 லட்சத்து 60 ஆயிரம் வரை வரவு வைக்கப்பட்டது. 30.05.94 அன்று ரூ 1 லட்சத்து 78 ஆயிரத்து 230 ரூபாய்செலுத்தப்பட்டது.
25.06.94 அன்று 1 லட்சத்து 70 ஆயிரம் செலுத்தப்பட்டது. 8.07.94 அன்று 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது.15.07.94 அன்று ரூ. 7 லட்சம் செலுத்தப்பட்டது. இத்தொகையை ஜெயராமன் என்பவர் செலுத்தினார். தன் மு-கவ-ரியாகஜெயலலிதாவின் வீட்டையே குறிப்பிட்டுள்ளார்.
24.07.94 அன்று ரூ.75 ஆயிரம், 29.07.94 அன்று ஒரு லட்சத்து 15 ஆயிரம், 09.08.94 அன்று ரூ.5 லட்சம், 25.08.94ல் ரூ.8லட்சத்து 50 ஆயிரம் செலுத்தப்பட்டது. அதே கணக்கில் 5.09.94 அன்று ரூ.75 ஆயிரம், 01.10.94 அன்று ரூ.5 லட்சத்து 10ஆயிரம், 09.07.95 அன்று ஒரு லட்சம் டிபாசிட் செய்யப்பட்டது.
ஜெ.ஜெ. லீசிங் பெயரில் நடப்புக் கணக்கு 27.01.1994 அன்று தொடங்கப்பட்டது. இதில் பங்குதாரர்களாக சசிகலா, இளவரசி,சுதாகரன் ஆகியோர் உள்ளனர். மைனர் விவேக் பெயரில் இளவரசி (சசிகலா அண்ணன் மனைவி) பாதுகாவலராக உள்ள சேமிப்புகணக்கு 12.09.94 அன்று தொடங்கப்பட்டது.
ஜெ. ரியல் எஸ்டேட் கணக்கு 27.01.94 அன்று தொடங்கப்பட்டது. இதில் பங்குதாரர்களாக சுதாகரன், இளவரசி, சசிகலாஆகியோர் உள்ளனர் என்றார்.
-
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications