தமிழகத்தில் இன்று
சென்-னை-யில் டீ கு-டித்--தீர்-க-ளா, அ-து பு-ளி-யங் கொட்-டை கஷா-யங்--க...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னை டீக் கடைகளில் டீ சாப்பிட்டவர்கள் எல்லாம் புளியங்கொட்டை கலந்த டீயை தான் 15 வருடங்களாக குடித்துவந்துள்ளனர் என்ற உண்மை இப்போது தெரியவந்துள்ளது.
டீக் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் டீ தூளில் புளியங்கொட்டைப் பொடியை கலக்கும் கும்பலை போலீசார் பிடித்த பிறகுதான் இந்த "குட்டு வெளிப்பட்டுள்ளது.
ஒரு கிலோ தேயிலைத் தூள் பாக்கெட்டில் 20 சதவீதம் அதாவது 200 கிராம் புளியங்கொட்டைத் தூள் என்று கலந்து கடந்த 15ஆண்டுகளாக தேயிலைத் தூள் விற்பனை செய்து வந்துள்ளது கேரளாவைச் சேர்ந்த கலப்படக் கும்பல்.
இக்கும்பல் கலப்படத்திற்கென்றெ சென்னை பெரம்பூரில் தனியாக ஒரு அரவை ஆலை வைத்துள்ளனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
"ஸீ ரோஸஸ், "சூப்பர் ஸ்டார் "பிரைட் ஸ்டார், "கின் லேன்ட் என்ற பெயரில் புளியங்கொட்டைத் தூள் கலந்த டீத் தூள்விற்பனையை அமோகமாக செய்து வந்துள்ளனர். இக்கும்பலில் உள்ள 6 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். மொய்தீன் குட்டிதலைமையில் அஜீஸ், ஹாஸ், சிகாபு, கபூர், ரஷீத் ஆகியோர் பிரபலமான தேயிலையை வாங்கி, அதில் கலப்படம் செய்து டீக்கடைகள், ஓட்டல்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்.
இவர்களுக்கு புளியங்கொட்டை சப்ளை செய்வதற்கென்றே ஒரு ஏஜென்ட் இருந்துள்ளார். அவரது பெயர் காசிம். சென்னையைசேர்ந்த இவர் டன் கணக்கில் புளியங்கொட்டை சப்ளை செய்து வந்துள்ளார்.
அவற்றை பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் உள்ள அரவை ஆலையில் இரவு, பகலாக அரைத்து, அங்கேயே தேயிலையுடன்கலந்து, பாக்கெட்டுகளில் அடைத்து பெரிய அளவில் விநியோகித்து வந்துள்ளனர்.
செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகமது இக்பால் என்பவர் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த ஆலைஅருகில் சென்றுள்ளார். கதவு மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளே இயந்திரம் ஓடக் கூடிய சத்தம் கேட்டு, விசாரித்திருக்கிறார்.
மருந்துக்காக புளியங்கொட்டையை அரைப்பதாக பொய் கூறியுள்ளனர். ஆனால், அங்கே தேயிலை பாக்கெட்டுகள் விதவிதமானஅளவுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டதும் இன்ஸ்பெக்டர் சந்தேகம் அடைந்து, போலீஸ் ஸ்டைலில்விசாரித்துள்ளார். அப்புறம் தான் இவ்வளவு உண்மையும் வெளிவந்தது.
கலப்பட அரவை ஆலையில் இருந்த 2 மூட்டை புளியங்கொட்டையையும், 121 மூட்டை கலப்பட தேயிலையையும் போலீசார்பறிதல் செய்தனர். கலப்படக் கும்பல் 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications