என்-கி-றார் -"தி-ரு"

Subscribe to Oneindia Tamil

அடிப்படையாக ஒரு விஷயத்தைப் பார்க்க வேண்டும். பீஹாரில் தாழ்த்தப்பட்ட மக்களைஅவ்வப் பாது கொன்று குவிக்கும் காட்டுமிராண்டித் தனத்தைச் செய்து வருவது - சிலமேல்ஜாதி மக்களின் ஆயுதம் தாங்கிய படைகள்.

இவர்களிடமிருந்து ஆயுதங்களைப் பறிக்கக்கூட எந்த அரசாலும் முடியவில்லை. இவர்கள்போதாதென்று அவ்வப்போது, வேறு பல ஜாதிப் பூசல்கள், கொலைகள்.

இதற்கிடையே நக்ஸலைட்டுகளின் வெறியாட்டம்.தொட்ட விஷயத்தில் எல்லாம் ஊழல்.அதிகார வர்க்கமே ஜாதிரீதியாகச் செயல்படுகிற அமைப்பாகி விட்ட அவலம். மொத்தத்தில்ஒரு காட்டு ஆட்சிதான் பீஹாரில் பல வருடங்களாதவே நடந்து வருகிறது.

இதற்கு முழுப் பொறுப்பு லாலு பிரசாத் யாதவ் மட்டுமல்ல. காட்டாட்சி நிலவுவதைப் பற்றிஅவர் கவலைப்படவில்லை - ஊக்கு வித்தார்.

அவருக்கு முன் இருந்தவர்கள் கொஞ்சம் கவலைப்பட்டுப் பார்த்து, கையை விரித்தார்கள்:அவ்வளவுதான் வித்தியாசம்.

அங்கு ஜனநாயகம் இல்லை: கும்பல் நாயகம்தான் இருக்கிறது. இதைச் சரிசெய்யவேண்டும் என்றால், சட்டசபைக் கலைப்பும், மறுதேர்தலும் மட்டும் உதவிவிடாது. ஒருமாநிலத்தில் மட்டுமே கூட, நெருக்கடி நிலை பிரகடனம் செய்யும் அதிகாரம்பயன்படுத்தப்பட வேண்டும்.

நக்ஸலைட்டுகளும்.ரண்வீர் சேனையும், ஆயுதம் தாங்கி, ஆட்சி அமைப்பையேகுலைக்கும் தாக்குதலில் ஈடுபடுபவர்கள்: ஆயுத மேந்தியவர்களால் விளையக் கூடியகலகம் என்ற வகையில் சேரக்கூடியது இது. ஆகையால் நெருக்கடி நிலை பிரகடனம்சாத்தியமே. பீஹாரில் நெருக்கடி நிலை பிரகடனம் ஆக வேண்டும்.

அரசியல் சட்டம் தந்திருக்கும் அடிப்படை உரிமைகள், அந்த மாநிலத்தில் அராஜகத்திற்குதரப்பட்டிருக்கும் உத்திரவாதங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. அதைத் தடுப்பதற்குஇந்த அடிப்படை

உரிமை என்ற போர்வை விலக வேண்டும். அதற்கு நெருக்கடி நிலை பிரகடனம்தான் வழி.

அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், ஒரு வேளை பீஹார் காட்டுத்தனத்திலிருந்துவிடுபடலாம்.

ஜாதி வெறியர்களின் கையில் இருக்கும் ஆயுதங்கள் பறிக்கப்பபடுவதும், நக்ஸலைட்டுகள்ஒடுக்கப்படுவதும், ஊழல் பெருமளவு குறைக்கப்படுவதும், அதிகாரிகள் தங்கள்கடைமையைச் செய்ய முனைவதும் பீஹாரில் அப்போதுதான் சாத்தியமாகும்.

இதைச் செய்ய பா.ஜ.க..முன் வருமா என்பது சந்தேகமே.அப்படியே அவர்கள் பீஹாரை சரிசெய்ய முற்பட்டாலும், கடும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸின் ஆதரவு பாரளுமன்றத்தில்தேவைப்படும். காங்கிரசுக்கு ஆட்சியைப் பிடிப்பதில் உள்ள ஆர்வம், அராஜகத்தைஒழித்துக் கட்டுவதில் ஏற்படுமா என்பது சந்தேகமே.

இரு தேசியக் கட்சிகளும் இப்படி தங்கள் தங்கள் நலனில் மட்டும் நாட்டம் கொண்டுசெயல்பட்டால், பீஹாரில் சீரழிவு தொடரத்தான் செய்யும். ஜனாதிபதி ஆட்சிப்பிரகடனமும், சட்டசபைக் கலைப்பும், மறுதேர்தலும் சிகிச்சைகள் அல்ல. வலி தெரியாமல்இருக்கக் கொடுக்கப்படும் மருந்து, அவ்வளவுதான்.

பீஹாரில் தேவைப்படுவது ரண சிகிச்சை.அதற்கு யாரும் முனையப் போவதில்லை என்பதுபீஹாரின் துரதிருஷ்டம், நாட்டின் தலைவலி.

இது சென்ற ஆண்டு பிப்ரவரியில் - அதாவது சுமார் 16 மாதங்களுக்கு முன்பாக, துக்ளக்தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து. இப்போது பீஹாரில் நடந்திருக்கிறஅராஜகத்தைப் பார்க்கும்போது, இதே கருத்தைத்தான் மீண்டும் வலியுறுத்தவேண்டியிருக்கிறது.

மேல் ஜாதியினரின் ரண்வீர் சேனை, யாதவ் ஜாதியினரின் பலரைக் கொன்றிருக்கிறது:இதற்கு சில தினங்களுக்கு முன்பாக மேல் ஜாதியினர் பல ர் கொல்லப்பட்டதற்கு "பழிக்குப்பழி" நடவடிக்கை இது.

கொலைகள், பழிக்குப் பழி கொலைகள், அதற்கு வஞ்சம் தீர்க்கும் கொலைகள்,அதற்குபாடம் கற்பிக்கிற கொலைகள், அதற்கு பதிலடி கொலைகள் ... என்று பீஹாரின் மத்தியபகுதி தொடர்ந்து ரணகளமாகவே இருந்து வருகிறது.

நாம் முன்பு கூறியது போல் பீஹார் முழுவதும் இல்லையென்றாலும், அராஜக மத்தியபீஹார் பகுதியிலாவது நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்படுவது நல்லது. ஜனாதிபதிஆட்சி என்பது கூட கான்ஸர் தீர, கஷாயம் குடிக்கிற மாதிரிதான் இருக்கும்..

நெருக்கடி நிலை பிரகடனம் என்றால், பாராளுமன்றத்தில் பல கட்சிகளின் ஒத்துழைப்புதேவைப்படும்: பா.ஜ.கவும் காங்கிரஸும் முனைந்தால் இது சாதிக்கப்படக் கூடியதே.

இந்தப் பிரச்சனையில் அரசியல் ஆதாயங்களை அறவே ஒதுக்-கி வைத்து செயலாற்றதேசிய கட்சிகள் முன் வராவிட்டால், பீஹாரின் ஜனநாயகம், தேசத்தின் ஜனநாயகத்தைஅர்த்தமற்றதாக்கி விடும்.

இது ஒருபுறமிருக்க, பீஹார் தொடர் நிகழ்ச்சிகளை ஓர் எச்சரிக்கையாக தமிழகம் எடுத்துக்கொள்ள வேண்டும். இங்கும் ஜாதிக் கலவரங்கள், கொலைகள் ஆகியவை அவ்வப் போதுநடக்கின்றன.

பீஹாரில் ஜாதி சேனைகள் - இங்கு ஜாதிக் கட்சிகள்: இவ்வளவுதான் வித்தியாசம்.புலிகளின் சகவாசத்தினால், இங்கு சில ஜாதிக் கட்சிகள், ஆயுத பலமும், பயிற்சியும்பெறக்கூடிய அபாயமும் உண்டு. தமிழகம் இப்போதே விழித்துக் கொள்ளா விட்டால், இம்மாநிலம் மற்றொரு பீஹார் ஆகி விடும். ஒரு நாடு இரண்டு பீஹார்களைத் தாங்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+