For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தீயசக்தி-யும்..தமிழ் மாநி-ல காங்-கி-ர-சும்..

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

அடுத்து யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மூப்பனார் தீர்மானித்தாக வேண்டும் என்று தமிழகமுதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்தார்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வேண்டுமா வேண்டாமா என்பதல்ல பிரச்சனை. தமிழக மக்ககளின் சட்டைப் பைகள் பத்திரமாக இருக்க வேண்டுமாஎன்பதுதான் பிரச்சனை என்றும் மூப்பனாருக்கு அவர் வலியுறுத்தினார்.

திருமண விழா மேடைகளை நடப்பு அரசியலுக்கு பயன்படுத்தி பரபரப்பை ஏற்படுத்துவது தி.மு.க.வின் வழக்கம். சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றதி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சிவாஜி மகன் திருமண விழா மேடையும் அதே போல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்விழாவில் முதல்வர் கருணாநிதி மணமக்களை வாழ்த்தி அரசியல் பேசியதாவது:

த.மா.கா. சட்ட மன்ற உறுப்பினர் ரங்கநாதன் வாழ்த்திப் பேசுகிறேன் என்ற பெயரில் அறிவுரையும், தெளிவுரையும் வழங்கினார். அதற்கு எனது நன்றி.

இரண்டு மூன்று நாட்கள் நான் உடல் நலிவுற்று படுத்த படுக்கையாக கிடந்தேன். இந்த திருமணத்தில் கலந்து கொள்ள முடியுமோ முடியாதோ என்றுபயந்தேன். ஆனால், இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிந்ததுடன், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளி மாவட்ட நிகழச்சிகளுக்கும் செல்லும்அளவுக்கு உடல் நிலையை தந்த இயற்கைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ரங்கநாதன் இங்கே ஒரு ஆசையை வெளிப்படுத்தினார். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது பிரச்சனை அல்ல. யார் வரக்கூடாது என்ற உணர்வுடன் அவர்பேசினார். நான் கூட தி.மு.க தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பவில்லை. வேறு எந்த கட்சித் தலைமையில் வேண்டுமானாலும் ஆட்சிஅமையலாம். அது பிரச்சனை கிடையாது.

சட்டசபையில் நான் ஏற்கனவே இது பற்றி பேசியபோது சில பெயருடைய பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் எல்லாம் கூட முதல்வராக வரலாம். ஆனால்,யார் வரக்கூடாது என்பதை குறிப்பிட்டு சொன்னேன்.

இது என்னுடைய சுயநலத்திற்காக அல்ல. தமிழக மக்களின் பொது நலனுக்காக, தமிழக மக்களின் சட்டைப்பைகள் பத்திரமாக இருக்க வேண்டும்என்பதற்காக, மக்களின் சொத்து சுகங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பொது நலத்தோடு கூறினேன்.

இதை ரங்கநாதன் தன்னுடைய தலைவரிடம் (மூப்பனார்) தெரிவித்தால் போதும். தோழமையுணர்வுடன் உறவு கொள்ள வேண்டுமா, வேண்டாமா? உடன்பாடுகொள்ள வேண்டுமா வேண்டாமா?. தொகுதி பங்கீடு செய்து கொள்ள வேண்டுமா வேண்டாமா என்பதெல்லாம் பிரச்சனை அல்ல.

தமிழக மக்கள் பத்திரமாக இருக்க வேண்டுமா வேண்டாமா? அவர்களின் பொது சொத்து சுகங்கள் பத்திரமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதுதானா பிரச்சனை. இதை மூப்பனார் புரிந்து கொள்ள வேண்டும்.

ரங்கநாதன் அதை புரிந்து கொண்டு தன்னுடைய உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். அதே போன்ற உணர்வுள்ள பல ரங்கநாதன்கள் த.மா.கா.வில் இருக்கின்றனர்.ஆனால், ஒரு ரங்கநாதன் தான் வாயை திறந்துள்ளார் என்றார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X