தமிழகத்தில் இன்று
து--பா-யில் ர-கு-மான்: ஜெ. வழக்கில் சாட்சி செ
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சாட்சியம் அளிக்கஇசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வெள்ளிகிழமை ஆஜராகவில்லை. இசைநிகழ்ச்சிக்காக அவர் துபாய் சென்றுள்ளதால் வர இயலவில்லை என்று தனிநீதிமன்றத்தில் அவரது வக்கீல் மனுத் தாக்கல் செய்தார்.
இதே வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட இசைக் கலைஞர் மாண்டலின் சீனிவாஸ் தனிநீதி மன்றத்தில் சாட்சியம் அளித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீது ஜெயலலிதாஆட்சிக் காலத்தில் வருமானத்தை மீறி66.5 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டுளளது.
இவ் வழக்கு விசாரணை முதலாவது தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்கும்படி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மாண்டலின் சீனிவாஸ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண வரவேற்பு விழாவில்இவர்கள் இருவரும் இசை நிகழ்ச்சி நடத்தியதால், அது தொடர்பாக சாட்சியம்அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அடுத்த வாய்தாவுக்கு வருவார்:
சம்மன் பெற்ற ஏ.ஆர் ரகுமான் வெள்ளிக்கிழமை ஆஜராவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இசை நிகழ்ச்சி ஒன்றிற்காக துபாயில்இருப்பதாகவும், அடுத்த வாய்தாவில் அவர் கண்டிப்பாக ஆஜராவார் என்றும் அவரதுவக்கீல் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதை ஏற்று ரகுமானுக்கு அவகாசம்அளித்தார் நீதிபதி.
பின்னர் மாண்டலின் சீனிவாஸ் சாட்சியம் அளித்தார். அவர் தனது சாட்சியத்தில்,சுதாகரன் வரவேற்பு நிகழ்ச்சியில் நான் மாண்டலின் இசைக் கருவி மூலம் இசைநிகழ்ச்சி நடத்தினேன். அதற்கு எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என்றுஎன்னிடம் கேட்டனர். ஆனால், நான் முதல்வர் வீட்டு திருமணத்தில் நான் கச்சேரிநடத்துவதே பெருமை, எனவே, பணம் எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டேன்.
ஆனால், அவர்கள் எனக்கு அழைப்பிதழ் தரும்போது ஒரு வெள்ளித்தட்டு, வெள்ளிகுங்குமச்சிமிழ், பட்டுப்புடவை ஆகியவற்றுடன் சேர்த்து அளித்தனர் என்றார்சீனிவாஸ்.
அடுத்ததாக வாட்ச் விற்பனையாளர் சஞ்சய் ஜெயின் என்பவர் சாட்சியம் அளித்தார்.சுதாகரன் திருமணத்திற்கு என்னிடம் 34 கைக் கடிகாரஙகள் (வாட்ச்) வாங்கினார்கள்.அதற்கு ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 565 ரூபாய் ரொக்கமாக அளித்தனர் என்றார்.
முன்னதாக இவ்வழக்கில் ஜுலை இறுதிக்குள் சாட்சிகள் விசாரணையை முடித்துவிடுவோம் என்று அரசு தரப்பு வக்கீல் சோமசுந்தரம் நீதிபதியிடம் உறுதியளித்தார்.
இவ்வழக்கில் மொத்தம் 1053 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது. 192 பேர்இதுவரை விசாரிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 70 பேர் வரை விசாரிக்கப்படுவார்கள்என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications