தமிழகத்தில் இன்று
-இந்-தி-ய சிறை-யில் உள்-ள ரஷ்யர்களை விடுவிக்க கோரிக்கை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மாஸ்கோ:
புரூலியா ஆயுத வழக்கில் தண்டனை பெற்று ஜெயலில் அடைக்கப்பட்டுள்ள 5 ரஷ்யர்களை விடுவிக்க இந்தியாவிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.
மேற்குவங்காளத்தில் உள்ள புரூலியா மீது பறந்த விமானத்திலிருந்து ஆயுதங்கள் கீழே விழுந்தன. இது தொடர்பான வழக்கில் பல குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள். இவர்களை விடுவிக்கும்படி அங்கு சென்றுள்ள இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் ரஷ்யா கோரிக்கை விடுத்தது.
நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வியாழக்கிழமை ரஷ்யா சென்றார். அங்கு ரஷ்ய வெளியுறவுத்துறைஅமைச்சர் செர்கி இவானோவை சந்தித்துப் பேசினார்.
அப்போது ஜஸ்வந்த் சிங்கிடம், இவானோவ் இக்கோரிக்கையை வைத்தார். இவர்களை விடுவிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்துப்பரிசீலிக்கப்படும் என்று ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார்.
பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பத் துறையில் இந்தியா - ரஷ்யா உறவு குறித்து அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
முன்னதாக ஜஸ்வந்த் சிங் ரஷ்யா துணைப் பிரதமர் விக்டர் கிறிஸ்டென்கோ வை சந்தித்துப் பேசினார்.
இலங்கை, ஈரான், அரேபிய நாடுகள், மற்றும் இந்தியாவுடன் ஏற்றுமதி, இறக்குமதியில் ரஷ்யா ஈடுபடுவது குறித்தும் அவர்கள் விவாதித்தார்கள்.முன்னதாக கிறிஸ்டென்கோ இதுகுறித்துக் கூறுகையில், இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பொருளாதாரத்தில் பல கூட்டு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஜஸ்வந்த்சிங் சிங் ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் ரஷ்ய தலைவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,பேச்சுவார்த்தை நல்ல முன்னேற்றத்தை தருவதாகவும் தெரிவித்தார்.
ஜஸ்வந்த் சிங் ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேச இருக்கிறார்.
யு.என்.ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications