தமிழகத்தில் இன்று
மீண்-டும் நீ-தி-மன்-றம் வந்-த-னர் ஜெயும் சசி-யும்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
டான்சி நிலபேர ஊழல் வழக்கில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஆஜரான ஜெயலலிதா, சசிகலா ஆகியோர்நீதிமன்றத்தில் ஆஜராகி 58 கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இன்னும் 40 கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காகதிங்கள் கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகின்றனர்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசு நிறுவனமான டான்சி நிலத்தை, ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாகஉள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக வாங்கினார். அரசு வழிகாட்டி மதிப்பீட்டை விட குறைவாகஇந்நிலத்தை விற்றதன் மூலம் அரசுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக ஜெயலலிதா, சசிகலா, முன்னாள்அமைச்சர் முகமது ஆசிப், முன்னாள் டான்சி தலைவர் டி.ஆர்.சீனிவாசன், முன்னாள் பத்திரப்பதிவுத் துறை தனிஆட்சியர் நாகராஜன், முன்னாள் முதல்வரின் முன்னாள் இணைச் செயலாளர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர்மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இவ்வழக்கு மூன்றாவது தனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவும், சசிகலாவும் 23ம் தேதிஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அன்பழகன் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.அதன்படி ஜெயலலிதாவும், சசிகலாவும் வெள்ளிக் கிழமை பகல் 2 மணிக்கு தனி நீதிமன்றத்தில் ஆஜராகினர். 2.15மணி முதல் மாலை 4.15 மணி வரை இருவரும் நீதிபதியின் கேள்விகளுக்கு வாக்குமூலம் அளித்தனர்.
மொத்தம் 98 கேள்விகளுக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிஅன்பழகன் விசாரணையின் துவக்கத்திலேயே கூறினார். அதன்படி பதிலளித்து வந்தனர்.
ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தை 1990ல் பதிவு செய்தீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா,1988ம் ஆண்டே இந்நிறுவனம் பதிவு செய்யப்பட்டது. நான்கு பேர் பங்குதாரர்களாக இருந்தனர். 1990ல் இருவர்ஓய்வு பெற்று விட்டனர். பின்னர் நாங்கள் இருவரும் பங்குதாரர்களாக இருந்து வருகிறோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவன விவகாரங்களில் நான் தலையிடுவதே இல்லை. அதன்அன்றாட நிர்வாகத்தில் இருந்து எந்த முடிவானாலும் சசிகலா தான் எடுத்து வந்தார். அவருக்கு நான் "பவர் ஆப்அட்டார்னி அளித்துள்ளேன் என்றார்.
அதை சசிகலாவும் ஒப்புக் கொண்டார். ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவன விவகாரங்களில் ஜெயலலிதாதலையிடுவதில்லை. எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்வேன் என்றார். இந்நிறுவனத்திற்காக டான்சி நிலம்வாங்கப்பட்டதற்கான கிரயப் பத்திரத்தில் ஜெயலலிதா கையெழுத்திடவே இல்லை என்றார்.
நீதிபதியிடம் இருந்து அந்த பத்திரத்தை வாங்கிப் பார்த்த ஜெயலலிதா, இது என் கையெழுத்து அல்ல. போலிகையெழுத்து, மோசடி என்றார்.
டான்சி நிலத்தை விற்க வேண்டும் என்று நான் முதல்வராக இருக்கும்போது முடிவெடுக்கவில்லை. 1985ம்ஆண்டே எடுக்கப்பட்ட முடிவு அது. அதற்காக ஒவ்வொரு முதல்வரும் கூட்டங்கள் போட்டு விவாதித்துள்ளனர்.அந்த கட்டாயம் எனக்கும் ஏற்பட்டதே தவிரே வேறு நோக்கம் இல்லை என்று நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்தார்ஜெயலலிதா.
தொடர்ந்து இவ்வாறு நீதிபதி கேட்ட 58 கேள்விகளுக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் பதிலளித்து வந்தனர். மாலை4.15 மணி ஆனதும் நீதிபதியிடம் ஜெயலலிதா ஒரு வேண்டுகோள் விடுத்தார்.
மீதிக் கேள்விகளுக்கு இன்னொரு நாள் பதிலளிக்கிறோம் என்று கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் அதை மறுத்தநீதிபதி அன்பழகன், இன்றே மீதிக் கேள்விகளுக்கும் பதிலளித்து விடுங்கள் என்றார்.
ஆனால் ஜெயலலிதா, எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. முதுகு வலி காரணமாக சிகிச்சையில்இருக்கிறேன். எனவே இன்னொரு நாள் அவகாசம் தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதை ஏற்று மீதி 40 கேள்விகளுக்கு திங்கள் கிழமை பதிலளிக்க அவகாசம் அளித்தார் நீதிபதி அன்பழகன்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications