தமிழகத்தில் இன்று
சணல் உற்பத்தியைப் பெருக்க ரூ. 2.62 கோடியில் மத்திய அரசு திட்டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
சணல் உற்பத்தியைப் பெருக்கவும், தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தவும், மத்திய அரசு 2.62 கோடி ரூபாய் செலவில் திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாககோவையில் வெள்ளிக்கிழமை மத்திய ஜவுளித் துறை அமைச்சர் காசிராம் ராணா தெரிவித்தார்.
கோவையில் பி.எஸ்.ஜி.,தொழில்நுட்பக் கல்லூரியில் சணல் வாரியத்தைத் துவக்கி வைத்து காசிராம் ராணா பேசியதாவது:
பருத்தியின் தரத்தை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப அமைப்பைப் போன்றே சணலின் தரத்தை மேம்படுத்தவும் ஒரு தொழில்நுட்பஅமைப்பை ஏற்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் (யூஎன்டிபி) கோவை பி.எஸ்.ஜி.,கல்லூரியில் துவக்கப்பட்டுள்ள இந்த சணல் வாரியம், தரமான சணலைஉற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, பயிற்சியும் அளிக்கும்.
இதற்கு மத்திய அரசு அனைத்து வகைகளிலும் உதவி செய்யும். இந்த திட்டத்திற்கென ரூ. 2.62 கோடியில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு தயாரித்துவருகிறது.
சர்வதேச அளவில் போட்டியிட நாம் சணலின் தரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியத்தில் உள்ளோம். உலகிலேயே அதிக அளவு சணல் உற்பத்தி செய்யும்நாடாக இந்தியா இருந்தாலும், தரத்தில் பின்தங்கியே உள்ளோம். அருகில் உள்ள வங்காளதேசத்தில் தான் தரமான சணல் உற்பத்தி செய்யப்படுகிறதுஎன்றார்.
விழாவில், பி.எஸ்.ஜி.,அறக்கட்டளையின் அறங்காவலர் கார்த்திகேயன், கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications