தமிழகத்தில் இன்று
பிஜி பிரச்சினை: இப்போதைக்கு முடிவு இல்லை...
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சுவா:
பிஜியில் ராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே ஏற்படவிருந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ராணுவம்தெரிவித்துள்ளது.
இரு தரப்பினருக்கும் இடையே சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் அப்படி ஏதும்நடக்கவில்லை. இதனால் கடந்த ஐந்து வாரமாக நிலவி வரும் குழப்பத்திற்கு முடிவு ஏற்படும் என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது.
இதுகுறித்து ராணுவச் செய்தித் தொடர்பாளர் எரோனி வொலவோலா கூறுகையில், சனிக்கிழமை ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரியவில்லைஎன்றார்.
ஒப்பந்தம் கையெழுத்தாவதில் என்ன சிக்கல் என்று விளக்க இரு தரப்பிலும் யாரும் கிடைக்கவில்லை.
தொழிலதிபர் ஜார்ஜ் ஸ்பீட் தலைமையிலான புரட்சியாளர்கள் குழு மே 19-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்து இந்திய வம்சாவளி பிரதமர்மகேந்திர பால் செளத்ரி உள்பட 30 பேரை சிறை பிடித்தது. ஆட்சியையும் கைப்பற்றியது.
பிஜி இனத்தவரே ஆட்சிப் பொறுப்பில் இருக்க வேண்டும் என்றார் ஸ்பீட். இதையடுத்து ராணுவமும் புரட்சியில் இறங்கி ஆட்சியைப் பிடித்தது. இதனால்சர்வதேச அளவில் எதிர்ப்புக் கிளம்பியது. இதையடுத்து ராணுவத்தினரும், புரட்சியாளர்களும் சந்தித்துப் பேச முடிவு செய்தனர்.
ராணுவத்திற்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. ஆயினும் ஒருமுறை கூடஉருப்படியான முடிவு ஏதும் எட்டப்படவில்லை.தற்போதுதான் முதல் முறையாக ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை வந்தது.
அடுத்த மூன்று மாதத்திற்கு பிஜி நிர்வாகத்தை நடத்த விரும்புவதாக பிஜி ராணுவம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அதற்கு புரட்சியாளர்கள் தரப்பில்சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் இடைக்கால அரசு அமைக்கவும் பிஜி ராணுவம் திட்டமிட்டுள்து. இதேபோல, ஜனநாயக ஆட்சி விரைவில் வர ஜார்ஜ் ஸ்பீட்டும்விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications