• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தில் இன்று

By Staff
|

து-ணி தைத்-த செல-வு ரூ 1.5 லட்-சம், நாய்க்-கு 8 கிலோ கறி: இ-து ஜெ வீட்-டு கணக்-கு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

ஜெயலலிதா வீட்டில் 12 நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்கு தின-மும் 8 கிலோ ஆட்டிறைச்சி வழங்கப்படுகிறதாம்.

இந்த வேலைகளை எல்லாம் மேற்பார்வையிடுவதற்கென்றே ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரை ஜெயலலிதாநியமித்திருந்தாராம்.

இந்த தகவல்கள் எல்லாம் இப்போது தனி நீதிமன்றத்தில் நடக்-கும் விசா-ர-ணை-கள் மூலம் வெளிவந்து கொண்டு-ள்ள-ன.ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அவரும், அவரைச் சார்ந்த சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறிசொத்துக்கள் வாங்கி குவித்துள்ளது தொடர்பான வழக்கு முதலாவது தனி நீதிமன்றத்தில் -நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட நகைகள், பொருட்கள், -முன்னாள் வளர்ப்புமகனின் திருமணச் செலவுகள் பற்றிய விவரங்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.

வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையில் சுதாகரன் திருமணத்திற்கு "கோட், சூட் தைத்துக் கொடுத்த டெய்லர் சாட்சியம்அளித்தார். சென்னை கதீட்ரல் சாலையில் செய்யது பக்கர் அன்ட் கோ என்ற டெய்லரிங் -நிறுவனத்தை -நடத்துபவர் அஜாஸ்அகமது. இவர் தான் திருமணத்தின் போது சுதாகரனுக்கு தேவையான உடைகளை தைத்து கொடுத்தவர்.

அவர் தனது சாட்சியத்தில், சுதாகரனுக்கு 22 சூட்ஸ், 22 சர்ட்ஸ், 3 சர்வானி கோட், 3 ஜிப்பா ஆகியவை திருமணத்திற்காக தைத்துக்கொடுத்தேன். தையல் கூலியாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 25 ரூபாய் காசோலையாக பெற்றேன் என்றார்.

பின்னர் ஜெயலலிதா வீட்டில் மேற்பார்வையாளராக பணியாற்றிய ஜெயராமன் என்பவர் சாட்சியம் அளித்தார். இவர் தமிழகஅரசின் பொதுத் துறையில் சார்புச் செயலாளராக இருந்தவர். ஜெயலலிதா ஆட்சியில் ஒன்றரை ஆண்டுகள் பதவி நீட்டிப்புபெற்றவர். பணி நீட்டிப்பின் கடைசி 6 மாதம் இருக்கும்போது இவரை போயஸ் தோட்ட வேலைக்கு ஜெயலலிதா அழைத்தார்.

அதன்படி போயஸ் தோட்டத்தில் வேலைக்கு சேர்ந்த ஜெயராமன் தனது சாட்சியத்தில், 26.08.1993ம் ஆண்டு வேலையில்சேர்ந்தேன். 12.10.96ம் ஆண்டு போயஸ் தோட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன். மாதம் 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் வீதம் 37மாதங்கள் ஜெயலலிதாவிடம் சம்பளம் பெற்றேன்.

ஜெயலலிதாவின் வங்கிக் கணக்குகளில் பணம் போடுவது, பணம் எடுப்பது, வேலையாட்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வது,மின் கட்டணம், சலவைக் கட்டணம் எல்லாவற்றையும் செலுத்துவது போன்ற வீட்டு நிர்வாகப் பணிகளை பார்த்தேன்.

ஜெயலலிதா வீட்டில் 10 முதல் 12 -நாய்கள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்கு தினம் பாண்டிபஜா-ரில் இருந்து 8 கிலோஆட்டிறைச்சி வாங்கி வந்து போடுவேன்.

சசிகலாவை பார்ப்பதற்கும் நிறைய அரசு அதிகாரிகள் போயஸ் தோட்டம் வருவார்கள். அவர்களில் ஐ.ஏ.எஸ். அதிகா-ரிகளும்அடங்குவர். இந்தியன் வங்கியில் சசிகலாவுக்கு கடன் வழங்கியதற்காக அங்கிருந்த பெண் அதிகா-ரியின் கணவருக்கு, ஸ்பிக்ஜோதி சமையல் எ-ரிவாயு டீலர்-ஷிப்பில் பங்குதாரர் உ-ரிமை தரப்பட்டது. அதே -நிறுவனத்தில் எனக்கும் பங்குதாரர் உ-ரிமம் தரசசிகலா விரும்பினார். ஆனால், -நான் மறுத்து விட்டேன் என்றார் அவர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X