தமிழகத்தில் இன்று
டீ தூள் இறக்குமதியை நிறுத்-தச் சொல்-கி-றா-ர் ஜெ
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
இலங்கை மற்றும் பிற நாடுகளிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்காவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.
தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலைத்தொழலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில அரசு பசுந்தேயிலைக்கு 15 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் பச்சைத் தேயிலைக்கு நியாய விலை நிர்ணயம் செய்திடாமல், இலங்கையில் இருந்துஇறக்குமதி செய்யும் தேயிலைக்கு சுங்க வரியை 7.5 சதவீதமாக குறைத்துள்ள மத்திய அரசின் செயலை அதிமுக கண்டிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் சிறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்களின் பச்சைத் தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.15 விலைநர்ணயம் செய்ய வேண்டும் என்று கடந்த மூன்று மாதமாக போராடி வருகின்றனர்.
பருவ மழை தவறியதால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உலக வர்த்தகஅமைப்பின் ஒப்பந்தம் அமலாக்கப்பட்டதன் காரணமாக இலங்கையில் இருந்து தேயிலைத் தூள் இறக்குமதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் பச்சைத்தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படுகிற தேயிலைத் தூளுக்கு 15 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக சுங்க வரியைஉயர்த்திய மத்திய அரசு திடீரென்று இலங்கை இறக்குமதிக்கு மட்டும் 7.5 சதவீதமாக சுங்க வரியை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.
நீலகரி தேயிலைத் தொழிலாளர்களின் நலனிற்காக டீத்தூளை அரசு கூட்டுறவு விற்பனை மையங்களில் தேயிலைத் தொழிலாளர்கள் விற்பனை செய்வதற்கும்மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையை சரிசெய்யும் வகையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
ஆனால் நீலகிரியில் இதுவரை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை.
கடந்த மே 10 மற்றும் 11 ம் தேதிகளில் நீலகிரியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், நிதியமைச்சர் யஷ்வந்த்சின்ஹா, வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரைச் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை.
மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு தடை செய்யாவிட்டால் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications