தமிழகத்தில் இன்று
பிரதமர் வருகை: சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பிரதமர் வாஜ்பாய் வருகையையொட்டி தமிழகத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று சென்னைபோலீஸ் கமிஷனர் காளித்து தெரிவித்தார்.
பிரதமர் வாஜ்பாய் ஜூலை 3ம் தேதி சென்னை வருகிறார். அன்று சென்னையில் தங்குகிறார். 4ம் தேதி காலைசென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ள "டைட்டல் பார்க் என்ற சாப்ட்-வேர் பூங்காவை திறந்து வைக்கிறார்.
மாலையில் கயத்தாறில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி மையத்தை அவர் திறந்து வைக்கிறார்.இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
பிரதமரின் தமிழக வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரலாறு காணாதவிதத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதற்கு, எந்த வித மிரட்டலும் காரணமல்ல என்று சென்னையில்வியாழக்கிழமை போலீஸ் கமிஷனர் காளித்து தெரிவித்தார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் அளித்த பேட்டி:
ஜூலை 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பிரதமர் வாஜ்பாய் சென்னையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.பிரதமர், முதல்வர் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் கடுமையான பாதுகாப்பு அளிக்கப்படும்.
அதற்கான பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இது தவிர, தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையினர், கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்படுகின்றனர். கமிஷனர், இரண்டு இணை கமிஷனர், 16 துணை கமிஷனர்கள் உள்பட 1500அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுகின்றனர்.
எந்த வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் சாலைகளிலும் ஆங்காங்கே போக்குவரத்துக்கள் தடைசெய்யப்படும் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications