தமிழகத்தில் இன்று
சந்திரசேகர் கட்சி அங்கீகாரம் ரத்தாகிறது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
தேர்தலில் படு தோல்வியடைந்த 7 மாநிலக் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது.
சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் குறைந்த ஓட்டுக்களைப் பெறும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் ஏற்கனவேமுடிவெடுத்துள்ளது.
ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தலில் செல்லுபடியான ஓட்டுக்களில் 6 சதவீதத்தை ஒரு கட்சி பெற வேண்டும். அல்லது ஒவ்வொரு 30 சட்டசபைதொகுதிகளில் ஒரு தொகுதியிலோ, ஒவ்வொரு 15 லோக்சபா தொகுதிகளில் ஒரு தொகுதியிலோ கட்சி வெற்றி பெற வேண்டும்.
இதில் எதிலும் வராத கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் கமிஷன் ஏற்கனவே முடிவு செய்திருந்தது.
ஹரியானா முன்னாள் முதல்வர் பன்சிலாலின் ஹரியானா விகாஸ் கட்சி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராமராவ் மனைவி லட்சுமி சிவபார்வதியின் தெலுங்குதேசம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள ஐக்கிய சிறுபான்மைக் கட்சி ஆகியவை சொந்த மண்ணில் அங்கீகாரம் இழந்துள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது. தாதர் நகர் ஹவேலியில் சிவசேனாவின் அங்கீகாரத்தை ரத்து செய்யதேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் சமாஜ்வாடி ஜனதா கட்சிக்கு சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டசின் சமதாகட்சிக்கு ஹரியானவிலும் அங்கீகாரம் ரத்து செய்யப்படுகிறது.
கேரளா மற்றும் மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய அளவில் அதிக ஓட்டுக்களைப் பெறவில்லை. இதுதொடர்பாக விளக்கம்அளிக்க ஜூலை 15 ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 25 ம் தேதி இதன் மீதான விசாரணை நடக்கிறது.
இந்தியக் குடியரசு கட்சி, ஜனதா கட்சி ஆகியவற்றுக்கும் தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications