ஈரோ 2000 கால்பந்து: ஹாலந்தை வென்று இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றது இத்தாலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஆம்ஸ்டர்டாம்:
ஈரோ 2000 கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடஇத்தாலி தகுதி பெற்றது.
ஆம்ஸ்டர்டாமில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில்ஹாலந்தை 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்கடித்தது. பெனால்டி கிக் மூலம்வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டது.
உள்நாட்டில் விளையாடும் மகிழ்ச்சியுடன் ஹாலந்து நாட்டினர் மிகவும் சிறப்பாகஆடினர். ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில் பந்து அவர்களிடமே இருந்தது.அவர்கள் 15 முறைக்கு மேல் கோல் இலக்கை நோக்கி பந்தை அடித்தனர்.
இருப்பினும் அவர்களால் கோல் அடிக்கவில்லை. இத்தாலி அணியினர் முழுவதும்தற்காப்பு ஆட்டத்திலும், ஹாலந்து அணியினர் தாக்குதல் ஆட்டத்திலும் கவனம்செலுத்தினர்.
இத்தாலி அணியினர் செய்த தவறுகளால் ஆட்டத்தின் இரு பாதியிலும் ஹாலந்துஅணிக்கு இரு பெனால்டி வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால், கேப்டன் டிபோயரும், முன்னணி வீரர் குலீவெர்ட்டும் அந்த வாய்ப்புகளை வீணடித்தனர்.
இருவரில் ஒருவராவது தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி கோல்அடித்திருந்தால் இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றிருக்கமுடியும். இத்தாலி அணி வீரர்ஒருவர் செய்த தவறால் அவர் சிகப்பு அட்டை காண்பிக்கப்பட்டுவெளியேற்றப்பட்டார். அதன் பிறகு ஆட்டம் முழுவதும் இத்தாலி அணியில் 10 பேர்மட்டுமே விளையாடினர்.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் போடாததால் கூடுதல் நேரம்ஒதுக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் கோல் போடவில்லை. இதையடுத்து டைபிரேக்கரில் பெனால்டி கிக் மூலம் வெற்றி தோல்வி நிர்ணயிக்க முடிவு செய்யப்பட்டது.
அதிலும் ஹாலந்து அணியினருக்கு அதிர்ஷ்டம் இல்லை. டை பிரேக்கரிலும் கேப்டன் டிபோயர் தனது வாய்ப்பை வீணடித்தார். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிவெற்றி பெற்றது.
ஜூலை 2-ம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் பிரான்ஸைஎதிர்த்து இத்தாலி விளையாடும்.
புதன்கிழமை நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் போர்சுகல்லை 2-1 என்ற கோல்கணக்கில் பிரான்ஸ் தோற்கடித்தது. கூடுதல் நேரத்தில் பெனால்ட் கிக் மூலம் கோல்போட்டு பிரான்ஸ் வெற்றி பெற்றது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications