தமிழகத்தில் இன்று
சோனி-யா-வை நோகடிக்-கும் ஜெயலலிதா
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன.
இப்போழுதுள்ள நிலவரப்படி, அ.தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் இருக்கின்றது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராகதேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு சற்று விறுவிறுப்பு அடைந்திருக்கிறது தமிழக காங்கிரஸ்.
நாளுக்கு நாள் காரசாரமான அறிக்கைகளை விட்டவண்ணம் இருக்கிறார் இளங்கோவன். மதுரையில் சில நாட்களுக்கு முன் பத்திரிகையாளர்களிடம்பேசியவர் எங்களால் தான் திராவிட கட்சிகளுக்கு லாபம், திராவிட கட்சிகளால் எங்களுக்கு எந்த லாபம் இல்லை. திராவிட கழகங்களின் முதுகில்நாங்கள் சவாரி செய்யவில்லை எங்கள் -முதுகில் தான் திராவிடக் கட்சிகள் சவாரி செய்கின்றன.
1991- ல் காங்கிரஸ் கட்சியுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததனால் தான் அ.தி.மு.க. வெற்றிபெற்றது என்று சொல்லிவிட்டு போக, ஏககோபத்தில் இருந்தார் ஜெயலலிதா.
மதுரையில் இருந்து சென்னை வந்தவுடன், அவசர அவசரமாக ஜெயலலிதாவை சந்தித்தார் இளங்கோவன். அப்பொழுது ஜெயலலிதா கோபத்தை வெளியேகாட்டிக் கொள்ளாமல். அதே நேரத்தில் சரியாகவும் அவரிடம் பேசவில்லையாம்.
இவராக சென்றார்..சந்தித்தார்..பேசினார்..வணக்கம் சொன்னார் வந்தார். அவ்வளவுதான் என்று சிரிக்கிறார்கள் தங்கபாலு கோஷ்டியினர்.
இந்த சந்திப்பில்.மூலமாக மதுரையில் தான் பேசிய விஷயத்தை எடுத்துச் சொல்லி அதை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்றுசமாதானப்படுத்தவும்,எதிர்காலத்திலும் அ.தி.மு.கவுடன் தான் கூட்டணி தொடரும் என்பதை தெளிவு படுத்தவே ஜெயலலிதாவை சந்திக்க சென்றார்இளங்கோவன்.
ஆனால் நடந்தது வேறு. பத்து நிமிட சந்திப்பு முடிந்து வெளியே வந்த இளங்கோவன் நிருபர்களிடம், எதிர்காலத்திலும் அ.தி.மு.கவுடன் கூட்டணி தொடரும்என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.
அ.தி.மு.கவைப் பொறுத்தவரை திராவிட இயக்கத் தலைவர் ஒருவர் தான் முக்கிய விஷயங்களைத் தீர்மானிப்பவராக இருக்கிறார். அவரது யோசனையின்படி ஒரு கருத்து சொல்லப்பட்டது. தமிழகத்தில் வடக்கு மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு செல்வாக்கு சற்று குறைச்சலாகவே இருக்கிறது. உடனடியாகஇதை சரி செய்ய வட மாவட்டங்களில் செல்வாக்கு மிக்க கட்சியுடன் கூட்டணி அமைப்பதே சரி.
காங்கிரஸ் கட்சிக்கென்று பெரிய செல்வாக்கு இருப்பது போல எனக்குத் தெரியவில்லை. பேசாமல் விட்டுவிடுங்கள். .ஒரு புதிய கூட்டணியைஆரம்பிக்கலாம் என்று ஜெயலலிதாவிடம் கருத்துச் சொல்ல, அவரும் ஏற்றுக் கொண்டிருக்கிறாராம்.
அதனைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைப்பது பற்றி இப்பொழுது பேச்சு நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில்,விடுதலைப் புலிகளையும், அவர்களது தனி ஈழ பிரிவினைக்கொள்கைகளையும் காங்கிரஸ் கட்சி என்றுமே ஆதரிக்காது. இந்த நிலையில் பா.ம.கவுடன்அ.தி.மு.க கூட்டணி அமைத்தால் இப்பொழுதுள்ள சூழ்நிலையில் அ.தி.மு.க கூட்டணியில் இருப்பது சரியாக இருக்காது என்றே காங்கிரஸ் மேலிடம்நினைக்-கி-ற-தாம்.
ஏற்கனவே..காங்கிரஸ் கட்சியை கழட்டி விடுவது என்று தீர்மானித்துத்தான் ஜெயலலிதா மற்ற கட்சிகளோடு பேசிவருகிறார். இந்த நிலையில் நாம்நமது பங்கிற்கு நம்மை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் காங்-கி-ரஸ் கட்-சி-யி-னர்.முதல் கட்டமாக, வரும்ஜூலை 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாள் விழாவையொட்டி ஒரு மாநாடு நடத்தவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. கோவை அல்லது மதுரையில்நடத்ததிட்டமிட்டிருக்கும் இந்த மாநாட்டில் சோனியாகாந்தி கலந்து கொள்வார் எனவும் சொல்கிறார்கள்.
இன்னும் 15 நாட்களே இருக்கின்ற மாநாட்டிற்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் யாரையும் அழைக்கவேண்டாம்.முக்கியமாக ஜெயலலிதாமாநாட்டிற்கு அழைத்தால் அவர் வந்துவிட்டாலும் தர்மசங்கடம். நான் வந்ததனால் தான் இவ்வளவு கூட்டம் வந்தது என்று பேச ஆரம்பிப்பார்.காங்கிரஸ் கட்சியின் மேடையிலேயே ஏதாவது சொல்லிவிட்டார் என்றால் நன்றாக இருக்காது. நமது தனி செல்வாக்கை தேர்தலுக்கு முன்பு காண்பித்துவிட வேண்டும் என்று களமிறங்கியிருக்கிறார்கள் காங்கிரஸ் காரர்கள்.
ஜெயலலிதாவை இந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு அழைக்காததற்கு இன்னொரு காரணத்தையும் சொல்கிறார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில்திண்டிவனத்தில் சோனியாவை பல மணி நேரம் காக்க வைத்து விட்டு கடைசியில் அந்த கூட்டத்துக்கு ஜெயலலிதா செல்லவில்லை. இந்த விஷயத்தில் மிகவும்எரிச்சலடைந்து விட்டார் சோனியா. தமிழக காங்கிரஸ் தலைவர்களும் நொந்-து போனார்கள். இப்பொழுது தமிழக காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி சென்றபொழுது கூட அதைக் குறிப்பிட்டு பேசினாராம் சோனியா.
அதன் பிறகு இனி ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் சோனியா இனி ஏறமாட்டார் என்றே பேசப்படுகிறது. இந்த நிலையில் இப்பொழுது நடக்கஇருக்கிற மாநாட்டிற்கு ஜெயலலிதாவை அழைப்பதை சோனியாவும் விரும்பவில்லை.
பாட்-டா-ளி மக்-கள் -கட்-சி கூட்-ட-ணிக்-கா-க காங்-கி-ர-சை-யும் தன்-னை-யும் ஜெய-ல-லி-தா நோ--க-டிக்-க ஆரம்-பித்-து-விட்-ட-தா-க-வேசோ-னி-யா நினைக்-கி-றார்.
ஜெயலலிதாவும் எதையும் கண்டு கொள்ளவில்லை அந்த திரா-வி-ட இயக்-கத் தலைவரின் பேச்சை மட்டும் சீரியஸ-ா-க கேட்டு செயல்படஆரம்பித்துவிட்டார். இன்னும் ஒரு சில நாட்களிலேயே தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் ஆரம்பித்துவிடலாம் என்று திட்டமிட ஆரம்பித்துவிட்டார்என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications