தமிழகத்தில் இன்று
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தாருங்கள்: வைகோ கோரிக்கை
ஈரோடு:
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு தாருங்கள் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகளுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக (ம.தி.மு.க.) பொதுச் செயலாளர்வைகோ வேண்டுகோள் விடுத்தார்.
ஈரோட்டில் மதிமுக சார்பில் நடைபெறும் 2 நாள் தமிழர் எழுச்சி மாநாடு தொடங்கும்முன் நிருபர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியதாவது:
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மதிமுக ஒரே நிலையைத் தான் கொண்டுள்ளது.அதில் மாற்றம் ஏதும் இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளில் மதிமுக மட்டும்தான் இலங்கைத்தமிழர்கள் விவகாரத்தில் தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. கூட்டணியில் உள்ளகட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மதிமுக எடுத்த நிலைக்கு பல காலகட்டங்களில்பலவகையான எதிர்ப்புகள் வந்தன. அவற்றை மதிமுக எதிர்கொண்டிருக்கிறது.இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பான தனது நிலையை மாநாட்டில்மேற்கொள்ளப்பட உள்ள தீர்மானங்கள் மூலம் மதிமுக மீண்டும் தெளிவுபடுத்தும்.
இலங்கைத் தமிழர் விவகாரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை மதிமுகஉணர்ந்துள்ளது. இம் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி கலந்துகொள்வதிலிருந்து இதை உணரலாம்.
காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி வழங்கவேண்டும் என்பது தொடர்பான தீர்மானம்காஷ்மீர் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டதை மதிமுக முழுமையாக ஏற்றுக்கொள்ளாது.
சுயாட்சி தொடர்பாக திமுக எந்த கருத்தைக் கொண்டுள்ளதோ அதே கருத்தைத் தான்மதிமுகவும் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாகவே சுயாட்சி உரிமை கேட்டு திராவிடக்கட்சிகள் போராடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்றார் வைகோ.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications