தமிழகத்தில் இன்று
அந்-த நாள் ஞாப-கம் நெஞ்-சிலே வந்-ததே...
சென்னை:
36 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் மருத்துவம் படித்த 70 டாக்டர்கள் தங்கள்குடும்பத்தினருடன் சென்னையில் சனிக் கிழமை சந்தித்துக் கொண்டனர். அந்தக் காலஞாபகங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
1964-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் 130 பேர் மருத்துவம் படித்தனர்.அவர்களில் 30 பேர் பெண்கள். இவர்கள் அனைவரும் மருத்துவத் துறையில் பல்வேறுபணிகளில், பல்வேறு இடங்களில் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் மீண்டும் சென்னையில் சந்திப்பது என்று தீர்மானித்தனர்.அதன்படி 70 பேர் கடிதங்கள், தொலைபேசி, இ-மெயில் மூலமாக விருப்பம்தெ-ரிவித்தனர். இந்த 70 பே-ரில் 30 பேர் பெண்கள்.
இந்த 70 பேரும் சனிக் கிழமை சென்னையில் அவர்கள் படித்த அதே மருத்துவக்கல்லூரியில் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்புக் கூட்டத்தில் -முதலில் தங்களுடன்படித்தவர்களில் இறந்து விட்ட 8 பேருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் பரஸ்பரம்அறி-முகம் செய்து கொண்டனர். விசா-ரித்துக் கொண்டனர். -முகம் மறந்தவர்களிடம்பழைய ஞாபகங்களை சுட்டிக் காட்டி மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த அபூர்வ சந்திப்பையொட்டி ஒரு மருத்துவக் கருத்தரங்கம் நடந்தது. பேராசிரியர்ராஜன் சந்தோஷம் தலைமை வகித்தார். 17 வயதில் மருத்துவ மாணவர்களைகல்-லூ-ரியில் அடியெடுத்து வைத்தபோது எடுத்த புகைப்படங்களும், இப்போது 53வயதில் இருக்கும் அவர்களது தற்போதைய புகைப்படங்களும், இந்த சந்திப்பில்விடியோ -மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
சென்னை மருத்துவக் கல்லூரியின் அந்தக் கால மாணவர்களான இந்த 70 பேரில் 7பேர் தற்போது அதே கல்லூ-ரியில் பேராசி-ரியர்களாக உள்ளனர். 2 பேர் அரசுமருத்துவமனை டீன்களா-க உள்ளனர். சென்னையிலும், வெளி-நாடுகளிலும் மருத்துவத்துறையில் தலைசிறந்தவர்களாக பலர் விளங்குகின்றனர்.
இந்த சந்திப்பு குறித்து டாக்டர் ராஜன் சந்தோஷம் கூறுகையில், நான் மருத்துவக்கல்லூரியில் சேரும்போது 4 அடி 11 அங்குலம் தான் உயரம் இருந்தேன். ட்ரவுசர் தான்அணிந்திருந்தேன். அதைப் பார்த்து விட்டு கல்லூ-ரியில் சேர்க்க மறுத்தனர். பின்னர்சிறப்பு அனுமதி பெற்று படித்தேன்.
அந்த இளமைக் காலத்தில் ஒரே பைக்கில் 4 பேர் சுற்றுவோம். ராகிங் என்பது வெறும்விளையாட்டாக தான் அப்போது இருந்தது என்றார்.
பின்னர் 70 பேரும் குரூப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்களுடன் சேர்ந்துஅவர்களின் குடும்பத்தினரும் படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் நடந்த விசேஷவிருந்தில் 70 பேரும் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்தினர். அதோடு-முதல் சந்திப்பு -முடிந்தது.
இவர்களின் இரண்டாவது சந்திப்பு அமெரிக்காவில் 2002ல் நடைபெறுகிறது.அதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பை அமெ-ரிக்காவில் பிட்ஸ்பர்க் -நக-ரில்வசிக்கும் இருதய சிகிச்சை டாக்டர் சுப்பையா ஏற்றுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications