தமிழகத்தில் இன்று
""இ-து தாம்ப்-பா ஆந்-தி-ரா"" என்-கி-றார் நா-யு-டு
கோவை:
தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் மா-நிலமே வருங்காலத்தில் -முன்னேறும் வாய்ப்பை பெறும், மற்ற மா-நிலங்கள்பின்னுக்குத் தள்ளப்படும் என கோவையில் ஆந்திர -முதல்வர் சந்திரபாபு -நாயுடு கூறினார்.
ஈரோட்டில் ம.தி.மு.க. நடத்தும் மாநாட்டில் பங்கேற்க, கோவை வந்த சந்திரபாபு நாயுடு, தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல்-நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் ஆந்திர மா-நிலத்தில் தொழில் துறைக்கு அளித்துள்ள வசதிகள், எதிர்காலத் திட்டங்கள் குறித்துதொழிலதிபர்களுக்கு விளக்கினார்.
நிகழ்ச்சியில் நாயுடு பேசியதாவது:
ஆந்திராவில் பல்வேறு தொழில் இடங்களில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. இதில் விஷன் 2020என்ற தொலைநோக்குத் திட்டம் இடம் பெறுகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஜவுளித் தொழில்நுட்ப பூங்கா, ஏற்றுமதித் துறைகம்,சர்வதேச தரம் வாய்ந்த விமான நிலையம் உட்பட பல்வேறு திட்டங்களை அரசு தொழில்துறையினர் பயன்பெறும் வகையில் நிறுவதிட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர முக்கியமாக சைபராபாத் என்ற ஐடெக் சிட்டி ஹைதராபாத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சாஃப்ட்வேர்ஏற்றுமதியை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த ஆண்டில் இங்கிருந்து சாஃப்ட்வேர் ஏற்றுமதிஆயிரத்து 300 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திராவில் வீடியோ கான்பிரன்சிங் முறையைப் பயன்படுத்தி ஆட்சி -நடத்த -முயற்சி மேற்கொண்டுள்ளேன். இதில் பாதியளவுவெற்றியும் பெற்றுள்ளேன். ஆந்திர மா-நிலத்தில் எந்த இடத்தில் யார் என்ன தொழில் செய்து கொண்டுள்ளனர், அவர்களின்பொருளாதார -நிலை என்ன என்பதை என்னால் அறிய -முடியும். ஒவ்வொரு கிராமத்திற்கும் கம்ப்யூட்டர் என்ற திட்டத்தைவிரைவில் -நிறைவு பெறச் செய்வேன்.
அந்நிய -முதலீடுகளை ஈர்க்கவும், வெளி-நாட்டினர் -முதலீடு செய்யவும், ஆந்திராவில் தேவையான -நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறேன். வருங்காலத்தில், தகவல் தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் மிகவும் பின்னுக்குத்தள்ளப்பட்டு விடும். தகவல் தொழில்நுட்பத்திற்கு சிறந்த எதிர்காலம் உள்ளது.
கோவையில் உள்ள தொழிலதிபர்கள் ஆந்திராவில் முதலீடு செய்ய -முன் வராவிட்டாலும், பார்வையிட்டு தகுந்தஆலோசனைகளை வழங்க ஆந்திராவிற்கு வர வேண்டும்.
இவ்வாறு சந்திரபாபு நிாயுடு பேசினார்.
விழாவில் மத்திய தொழில்துறை இணை அமைச்சர் வித்யாஸ்வேரா ராவ் மற்றும் சைமா முன்னாள் சேர்மன் கிருஷ்ணராஜ்வானவராயர், கே.ஜி மருத்துவமனையின் சேர்மன் டாக்டர் பக்தவத்சலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications