For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News
உத-வி மழையில் திக்-கு-முக்கா-டும் சசி-க-லா

Sasikala
மாணவி சசி-க-லா
உதவி மழையில் திக்குக்காடிப் போய் இருக்கிறார் மாணவி சசிகலா.

ஆதரவு தந்த அனைவ-ருக்-கும் ஆனந்தக் கண்ணீரால் -நன்றிக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்.

"பீஸ் கட்டுவதற்கு மட்டும் பணம்கேட்டேன். ஆயிரம் கரங்கள் அள்ளிக் கொடுக்க -முன் வந்தன.படிப்பது, படித்துக் கொண்டேஇருப்பது ஒன்றே அந்த அன்பு உள்ளங்களுக்கு -நான் செலுத்தப் போகும் -நன்றிக் கடன் என்று கண்ணீர் மல்க உணர்ச்சி வசப்பட்டுப்பேசினார் சசிகலா.

என் படிப்புக்கு எத்தனை கரங்கள் உதவி செய்ய நீண்டனவோ, அதேபோல் நானும் படித்து -முன்னேறி என் போன்றமாணவிகளுக்கு உதவுவேன் என்ற வைராக்கியத்தோடு பிளஸ் 1 வகுப்பில் அடியெடுத்து வைக்கிறார்.

பள்ளி இறுதித் தேர்வில் (எஸ்.எஸ்.எல்.சி.) 500க்கு 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளி மு-தல் மாணவியாக வெற்றி பெற்றும்,அதற்கு மேல் படிக்க -முடியாமல் அம்மாணவியை குடும்ப வறுமை தடுக்க, வேறு வழியின்றி குலத் தொழிலான மண் பானை விற்கபோய் விட்டார் மாணவி சசிகலா.

இந்த மாணவியின் பரிதாப நி-லையை படம் படித்துக் காட்டியது "இண்டியா இன்போ டாட் காம். அதன் விளைவாக, --நல்லஉள்ளங்களுக்கு பஞ்சமில்லை என்பதும், கடல் கடந்து வாழும் தமிழ் ஈர -நஞ்சங்களும் கொஞ்சமில்லை என்பதும் தெ-ரிந்துமகிழ்ந்தோம்.


Sasikala- Always first
Sasikala- Always first
-பள்-ளி-யில் எப்-போ-தும் மு-த-லி-டம்...
அந்த மகிழ்ச்சியோடு மாணவி சசிகலாவை, சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள அரசு குடியிருப்பு பகுதி வீட்டில்சந்தித்தோம். அந்த வீடே அவர்களின் வறுமையை பறைசாற்றியது.

"வாழ்க்கையில் கஷ்டத்தை தவிர வேறு எதையும் -நாங்க அனுபவிச்சதே கிடையாதுங்க... இப்போ தான் எங்களுக்குசந்தோஷமே... அந்த சந்தோஷம் எதனாலன்னா...? படிக்க -முடியலேன்னு தெ-ரிஞ்சதும் இந்தா பணம் என்று சொல்லி அள்ளிக்கொடுக்க ஆயிரம் பேர் -முன் வந்தது தாங்க... அந்த சந்தோஷம் போதும்ங்க... இனிமே எந்த சந்தோஷ-மும் இதை விட பெ-ரிசாஎங்களுக்கு தெ-ரியாதுங்க... என்று கலங்கிய கண்களுடன் வரவேற்றார் மாணவியின் தாயார் விஜயா.

""அய்யய்யோ போதும்ங்க... இவ்வளவு பேரு உதவிக்கு வருவாங்கன்னு நாங்க நினைக்கவே இல்லீங்க... கஷ்டம் காரணமாபெத்த புள்ளையை படிக்க வைக்க -முடியலியேன்னு ப-ரிதவிச்சுகிட்டு இருந்தோம்... ஆனா, பல பேரோட கைகள் எங்க கண்ணீரைதுடைக்க தயாரா இருக்குன்னு தெ-ரிஞ்சதும்... என்ன சொல்றதுன்னே தெ-ரியலீங்க... போதும்ங்க... இனிமேல் எங்களுக்குஅவங்களோட ஆசியும், அன்பும் போதும்ங்க... என் மகள் பாக்கியசாலிங்க... பெத்த மகளா-ல எனக்கு இப்படி ஒரு பெருமைகிடைச்சிருக்குங்க... என்று தந்தை வாசுவும் கண்ணீர் சிந்தினார்.

இருவருக்கும் நடுவில் இனம் புரியாத சந்தோஷத்தில் அமர்ந்திருந்த மாணவி சசிகலா, ""இந்த மாதி-ரி -நானும் -நிறைய பேருக்குஉதவி செய்வேங்க... அதுக்கேத்த மாதி-ரி தொடர்ந்து -நல்லா படிப்பேங்க... படிச்சு -முன்னேறி கம்ப்யூட்டர் இன்ஜினியரா வந்துபடிக்க -முடியாத ஏழை பிள்ளைகளுக்கு -நிச்சயம் உதவுவேன்... அதுதான் என்னோட லட்சியம்... அதை -நிறைவேற்றி வையுன்னுஇப்போ ஆண்டவனை -நான் வேண்டிகிட்டு இருக்கேங்க... என்றவர் மீண்டும் தொடர்ந்தார்...

""வெளிநாடுகளில் வாழ்ந்தாலும் நம்ம ஊரு பொண்ணு படிக்க -முடியலேன்னு தெ-ரிஞ்சதும் உதவி செஞ்சவங்க எல்லாருக்கும்ரொம்ப தேங்க்ஸ்... இந்த அளவுக்கு -நிறைய பேரு உதவி செய்வாங்கன்னு -நினைச்சுக் கூட பாக்கலீங்க... என்று ஆச்ச-ரியத்தோடுபேசினார்.

உண்மையான அன்பின் வெளிப்பாட்டை உணர்ந்து கொண்டிருக்கிற அந்த ஏழைக் குடும்பத்தின் நாளைய கம்ப்-யூட்-டர்பொறி-யா--ளர் சசிகலா, பெரம்பூர் பகுதியில் உள்ள பென்டிக் மகளிர் மேல் -நிலைப் பள்ளியில் பிளஸ் 1 -முதல் குரூப்பில் சேர -முடிவுசெய்துள்ளார். செலவுகளை -நடிகர் விஜய் ஏற்க -முன் வந்துள்ளார்.

ஜெயலலிதா, -மூப்பனார் போன்ற தலைவர்களிடம் இருந்தும் மாணவி சசிகலாவுக்கு உதவி அழைப்புகள் வந்தன. ஆனால்,அவற்றிற்கெல்லாம் பணிவுடன் -நன்றியை மட்டும் பதிலாய் சமர்ப்பித்துள்ளது மண் பானையை -நம்பி வாழும் இந்த ஏழைக்குடும்பம்.

"காமராஜர் பிறந்த மண்ணில் கல்விக்கு பணமில்லாமல் ஒரு குழந்தை படிக்க முடியாமல் போவதா... எவ்வளவு செலவானாலும்-நான் ஏற்கிறேன் என்று 80 வயது பணக்காரப் பெ-ரியவர் ஒருவர் கடிதம் அனுப்பினாராம். அந்த பெ-ரியவரை -ந-ரில் சந்தித்துகாலில் விழுந்து ஆசி பெற்றுத் திரும்பியுள்ள சசிகலா உற்சாகம் பொங்கசொன்னார் இப்படி...

""இதுபோன்ற நல்ல உள்ளங்களின் ஆசீர்வாதம் மட்டுமே எனக்கு இனித் தேவை... நான் வாழ்ந்து காட்டுவேன்

அவர் -வெற்றி-கள் கு-விக்க நம-து வாழ்த்துக்கள்
Sasikalas Address:

V. Sasikala

D/o. E.Vasu,

289, Sharma Nagar,

Viyasarpadi,

Chennai - 600 039.

உ-த-வி-ய -உள்-ளங்க-ளுக்-கு நன்-றி சொல்-கி-றார் மாண-வி சசி-க-லா

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X