தமிழகத்தில் இன்று
இரட்-டை வேஷம் போடா-தீங்-கப்பா...
சென்னை:
நீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகள் பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் இரட்டை வேடம் போடுவதை -நிறுத்திக்கொண்டு, அவர்களின் -நியாயமான கோ-ரிக்கைகளை ஏற்க வேண்டும்.
இல்லையேல் தமாகா போராடத் தயங்காது என்று தமாகா பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமானஎஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில்,
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அரசால் அமைக்கப்பட்ட குழு, தனதுஅறிக்கையை -முதல்வ-ரிடம் சமர்ப்பித்துள்ளது. வேதனைக் குழியில் விழுந்து தத்தளிக்கும் நீலகி-ரி தேயிலை விவசாயிகள்,தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு கிடைப்பதற்கான தீர்வு குறித்து இந்த அறிக்கையில் ஏதேனும் உள்ளதா என்பதை அரசுவெளியிட வேண்டும்.
பச்சைத் தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.15 விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நீலகிரி விவசாயிகள் போராடி வருகின்றனர்.இந்த பேராட்டம் தொடர்பாக விவசாயிகள் சங்க பிரதிநதிகள் கடந்த மே 10,11 ஆகிய தேதிகளில் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய்,-நிதியமைச்சர் சின்கா, தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மாறன் ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
வெளிநாடுகளில் இருந்து தேயிலை இறக்குமதிக்கு தடை செய்ய வேண்டும் என்று அப்போது வலியுறுத்தினர். ஒரு பக்கம் நீலகிரிவிவசாயிகளின் கோரிக்கைகளை ப-ரிசீலிப்பதாக கூறிக் கொண்டு, மறுபக்கம் ஓசைப் படாமல் இலங்கையில் இருந்து தேயிலைஇறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இறக்குமதி தேயிலைக்கு சுங்க வ-ரி 15 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அறிவித்து விட்டு, மறு-நாளேஇலங்கையில் இருந்து ரூ.1.5 கோடிக்கு தேயிலை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனத்திற்கு அனுமதி தந்ததோடு, சுங்கவரியையும் 7.5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இப்பிரச்னையில் மத்திய மா-நில அரசுகள் இரட்டை வேடம் போடுவதைகை விட வேண்டும்.
நீலகிரி விவசாயிகளின் தேயிலைக்கு நியாயமான விலை கிடைக்கச் செய்வதில் இனியும் தாமதிக்கக் கூடாது. மத்திய அரசுதேயிலை இறக்குமதியை உடனடியாக -நிறுத்த வேண்டும். ராணுவத்திற்கு தேவையான தேயிலையை நீலகி-ரி விவசாயிகளிடம்வாங்க வேண்டும்.
அதேபோல் தமிழக அரசும் நீலகிரி தேயிலையை ரேஷன் கடைகள் மூலம் விற்க -நடவடிக்கை எடுக்க வேண்டும்.இக்கோ-ரிக்கைகளுக்காக குரல் கொடுக்கவும், போராடவும் தமாகா தயங்காது என்று கூறியுள்ளார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications