தமிழகத்தில் இன்று
கோர்ட்டுகளில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் குறித்து ராம்ஜெத்மலானி வருத்தம்
சென்னை:
இந்தியாவில் கோர்ட்டுகளில் முடிக்கப்படாமல் தேங்கிக்கிடக்கும் வழக்குகள் தனக்கு மிகவும் வருத்தம்அளிப்பதாக மத்திய சட்டஅமைச்சர் ராம்ஜெத்மலானி கூறினார்.
சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியா முழுவதும் பல ஆண்டுகளாக கோர்ட்டுகளில் வழக்குகள் முடிக்கப்படாமல் தேங்கிக்கிடப்பது வருத்தம்அளிக்கிறது. மொத்தம் 3 கோடி வழக்குகள் இப்படி தேங்கிக் கிடக்கின்றன. உயர்நீதிமன்றங்களில் மட்டும் 30லட்சம் வழக்குகள் முடிக்கப்படாமல் உள்ளன.
இவற்றை விரைந்து முடிப்பதற்காக தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றேன். வழக்குகள் இப்படி தேங்கிக் கிடக்ககாரணம் போதுமான நீதிபதிகள், நீதிமன்றங்கள், கட்டிடங்கள் இல்லாததுதான். இது தொடர்பாக உயர்நீதிமன்றதலைமை நீதிபதிகள், மாநில முதல்வர்களிடம் எவ்வளவு நீதிபதிகள் தேவை எவ்வளவு நீதிமன்றங்கள் ,கட்டிடவசதி தேவை என்று பட்டியல் தயாரித்து ஜூலை மாதத்திற்குள் தரும்படி கூறி கடிதம் அனுப்பியுள்ளேன்.
அவர்கள் பட்டியல் தந்ததும் வருகிற ஆகஸ்டு மாதம் மாநில முதல்வர்கள் , ஐகோர்ட் தமைமை நீதிபதிகள்மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளேன். அதில் இந்த பிரச்சனைக்கு தீர்வாக உரிய விரைவுத்திட்டம் ( ப்ளூ பிரிண்ட்)தயாரிக்கப்படும் . தமிழக முதல்வரிடமும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் இது குறித்து பேசியுள்ளேன்.
உச்ச நீதிமன்றத்தின் கிளை தென் மாநிலத்தில் திறக்கப்படவேண்டும் என்பதை ந ான் வரவேற்கிறேன். இதைகொள்கை அளவில் மத்திய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. இறையாண்மை பாதிக்கும் என்கிறது. அதை மறுபரிசீலனை செய்யும் படி வற்புறுத்துவேன். சுப்ரீம் கோர்ட் கிளையை தென் மாநிலத்தில் நிறுவுவது என்றால்சென்னையிலா, பெங்களுரிலா, ஐதராபாத்திலா என்கிற கேள்வியும் எழுகிறது. அதற்கும் ஒருமித்த முடிவு வரவேண்டும் என்று கூறினார் ராம்ஜெத்மலானி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications